Armstrong : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை.. சென்னையில் பகீர் சம்பவம் - Tamil News | BSP Tamil Nadu President Armstrong murder In Chennai home | TV9 Tamil

Armstrong : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை.. சென்னையில் பகீர் சம்பவம்

Updated On: 

05 Jul 2024 23:06 PM

ஆம்ஸ்ட்ராங் பலத்த காயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆம்ஸ்ட்ராங்கை அங்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Armstrong : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை.. சென்னையில் பகீர் சம்பவம்

கொலை செய்யப்பட்டவர்

Follow Us On

ஆம்ஸ்ட்ராங்: சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் மர்ம நபர்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பெரம்பூரில் வசித்து வந்தவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இன்று வழக்கம்போல் தன்னுடைய வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று அவரது வீட்டுக்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டியுள்ளது. இந்த கொடூர தாக்குதலில் ஆம்ஸ்ட்ராங் பலத்த காயமடைந்தார்.

ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆம்ஸ்ட்ராங்கை அங்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தனிப்படை அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Also Read : நண்பன் ஆம்ஸ்ட்ராங் கொலை.. மருத்துவமனையில் கதறி அழுத இயக்குநர் பா.ரஞ்சித்!

சென்னை, பெரம்பூரில் அரசியல் கட்சி தலைவர் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜவாஹிருல்லா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சென்னையின் பரபரப்பான பகுதியில் அரசியல் கட்சி தலைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே சென்னையில் ஆம்ஸ்ட்ராங் வீடு அமைந்துள்ள பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. தகவல் அறிந்த பகுஜன் சமாஜ் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவரது உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்துள்ளனர். மேலும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்து உரிய தண்டனை வழங்க வேண்டும் என கூறி அவரது ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

டிஆர்பியில் டாப் 10 இடம் பிடித்த சீரியல்கள் லிஸ்ட்!
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி...
உலகில் இயற்கையாகவே வண்ணங்களால் நிறைந்த இடங்கள்!
காலை உணவை தவிர்ப்பதால் ஏற்படும் சிக்கல்கள்...
Exit mobile version