Exclusive: வழக்கத்திற்கு மாறான வெப்பநிலை.. காரணம் என்ன? பிரத்யேக பேட்டி அளித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன்..
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து தஞ்சாவூரில் 39, பாளயங்கோட்டையில் 39, கடலூரில் 38.2, அதிராமபட்டினத்தில் 38.9, ஈரோடு 39.2, நாகையில் 39.3, கரூரில் 38.5, காரைக்காலில் 38.8 டிகிரி செல்சியல் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் கடுமையாக உயர்ந்து வருகிறது. கிட்டத்தட்ட 110 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகி வருகிறது. செப்டம்பர் மாதத்தில் இது போன்ற அதிகபட்ச வெப்பநிலை பதிவாவது இதுவே முதல் முறையாகும். இந்த வழக்கத்திற்கு மாறான வெப்பநிலையால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள், பெரியவர்கள், வேலைக்கு செல்பவர்கள் என அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுவாக ஏப்ரல், மே, ஜூன் போன்ற காலக்கட்டத்தில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் கடந்து பதிவாகும். ஆனால் இந்த ஆண்டு மாறாக மே மற்றும் ஜூன் ஆகிய மதங்களில் நல்ல மழை பதிவு இருந்தது. ஜூன் மாதம் முடிந்தது முதல் ஜூலை தொடக்கத்தில் இருந்து வெப்பநிலை கணிசமாக உயரத்தொடங்கியது. இது வழக்கத்திற்கு மாறாக பதிவாகி வருகிறது
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வெயில் மண்டையை பொளக்கிறது. பகல் நேரங்களில் வெளியே செல்லும் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 41 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனை தொடர்ந்து தஞ்சாவூரில் 39, பாளயங்கோட்டையில் 39, கடலூரில் 38.2, அதிராமபட்டினத்தில் 38.9, ஈரோடு 39.2, நாகையில் 39.3, கரூரில் 38.5, காரைக்காலில் 38.8 டிகிரி செல்சியல் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க: என்கவுண்டரில் பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி சுட்டுக்கொலை.. யார் இந்த காக்கா தோப்பு பாலாஜி?
சென்னையை பொறுத்தமட்டில் மீனம்பாக்கத்தில் 39.2 டிகிரி செல்சியஸும் நுங்கம்பாக்கத்தில் 38 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது. அதாவது வழக்கத்தை விட 5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாக பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இந்த காலக்கட்டத்தில் 40 டிகிரி செல்சியஸ் கடந்து பதிவாகி வருவது இதுவே முதல்முறையாகும். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல இயக்குனர் பாலசந்திரன் டிவி9 தமிழ்-க்கு பிரத்யேகமாக தகவல் அளித்துள்ளார். அதாவது, ” கடந்த சில நாட்களாக வட இந்தியாவில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது, மேலும் ஆந்திரா, ஒடிசா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த மாதம் முதல் கனமழை கொட்டி வருகிறது. வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மழையானது தொடர்ந்து வருகிறது.
Madurai AP ATR for September is broken with today 41.0. It is 2024 all the way, such is the heat there.
41.0 – 18.09.2024
40.8 – 05-09-2024
40.6 – 14-09-2024
40.4 – 10-09-2019
40.3 – 16-09-2024
40.1 – 06-09-2024
40.0 – 15-09-2024Madurai AP is the hottest place in India too.
— Tamil Nadu Weatherman (@praddy06) September 17, 2024
வட மாநிலங்களில் பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், தென் மாநிலங்களில் வறண்ட வானிலையே நிலவுகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி வடக்கு நோக்கி நகரும் போது காற்றில் இருக்கும் ஈரப்பதம் இழந்து வறண்ட வானிலை நிலவுகிறது. இந்த வழக்கத்திற்கு மாறான வெப்பநிலைக்கு இதுவே காரணம்” என தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: டான்ஸ் மாஸ்டர் ஜானி தெலுங்கு படங்களில் பணியாற்ற தற்காலிக தடை
மேலும், இன்னும் சில நாட்களில் தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவ மழை தொடங்க இருக்கும் நிலை, செப்டம்பர் 31 ஆம் தேதிக்கு பிறகே இந்த பருவ மழையின் தீவிரம் எப்படி இருக்கும் என்பது குறித்து கணிக்க முடியும் என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இன்னும் சில நாட்களுக்கு வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், 20 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல், தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (18.09.2024 மற்றும் 19.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.