TN Cabinet Reshuffle: செந்தில் பாலாஜி உட்பட நான்கு அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யாருக்கு எந்த துறை?

உயர்க்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

TN Cabinet Reshuffle: செந்தில் பாலாஜி உட்பட நான்கு அமைச்சர்கள் பதவியேற்பு.. யார் யாருக்கு எந்த துறை?

கோப்பு புகைப்படம்

Published: 

29 Sep 2024 10:55 AM

தமிழ்நாட்டில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் நேற்று மாலை வெளியானது. இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழ்நாடு ஆளுநருக்கு கடிதம் அனுப்பிய நிலையில் அதனை ஏற்று ஆளுநர் அலுவலகம் அதிகாரப்பூர்வ அமைச்சரவை மாற்றத்தை வெளியிட்டது. இதில் சிறையில் இருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவருடன் மேலும் 3 அமைச்சர்கள் நியமணம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ஏற்கனவே அமைச்சரவையில் இருக்கும் 3 அமைச்சர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ் மற்றும் ராமசந்திரன் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.

நீக்கப்பட்டவர்களுக்கு பதிலாக பதில் நான்கு பேர் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் இரண்டு புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது அதன்படி, செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ், ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க: இளைஞரணி செயலாளர் டூ துணை முதலமைச்சர்.. அமைச்சர் உதயநிதியின் அரசியல் பயணம்..

அதே நேரத்தில், கோவை செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகிய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு துறை இன்னும் ஒதுக்கப்படவில்லை. இன்று பதவியேற்பு விழாவிற்கு பின் துறைகள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: எல்லாம் ’புஷ்பா’ பட இயக்குநருக்கு தெரியும்… பாலியல் வழக்கில் கைதான ஜானி மாஸ்டர் சொன்ன திடுக்கிடும் தகவல்

இவற்றுடன் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். துணை முதலமைச்சர் உடன் நான்கு அமைச்சர்கள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் இருக்கும் தர்பார் ஹாலில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி முன்னிலை பதவியேற்றுக்கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், உதயநிதிக்கு திட்டம், வளர்ச்சி துறை ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் வசம் இருந்த திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை தான் கூடுதலாக உதயநிதிக்கு ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, விளையாட்டுத்துறையும் உதயநிதி ஸ்டாலினிடம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு பக்கம் இருக்க, ஏற்கனவே அமைச்சர் பதவி வகித்து வந்த 3 அமைச்சர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். முதலில் கிடைத்த தகவலின் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், காந்தி, மனோ தங்கராஜ் நீக்கப்படுவார்கள் என தலவல் வெளியானது. ஏற்கனவே இவர்கள் மீது அதிருப்தியில் இருந்த அரசு அதிரடி நடவடிக்கை எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

அதன்படி, சிறுபான்மைத் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், கோவை செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகிய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர். இவர்களுக்கு துறை இன்னும் ஒதுக்கப்படவில்லை. இன்று பதவியேற்புக்கு பின் இவர்களுக்கான துறை பற்றிய விவரங்கள் வெளியாகும்.

இதோடு இல்லாமல் சில அமைச்சர்களின் துறைகள் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, உயர்க்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, வனத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பால்வளத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். வனத்துறை அமைச்சராக இருந்த மதிவேந்தன், ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.

ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த கயல்விழி, மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார். சுற்றுச்சூழல் மற்றம் காலநிலை மாற்றத் துறை அமைச்சராக இருந்த மெய்யநாதன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு கூடுதலாக சுற்றுச்சூழல் மற்றம் காலநிலை மாற்றத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!