யானைக் குட்டிக்காக கண்ணீர் விட்டு அழுத வனத்துறை.. கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்! - Tamil News | | TV9 Tamil

யானைக் குட்டிக்காக கண்ணீர் விட்டு அழுத வனத்துறை.. கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்!

Updated On: 

10 Jun 2024 15:35 PM

Coimbatore : கோவை மருதமலை வனப்பகுதியில் கடந்த 20ஆம் தேதி 40 வயது பெண் யானையும், அதன் மூன்று மாத குட்டி யானையும் இருந்ததை வனத்துறையினர் பார்த்தனர். அப்போது, 40 வயதான பெண் யானைக்கு உடல்நலம் சரியில்லாமல் இருப்பது தெரியவந்ததது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் வன கால்நடை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் குழு அமைத்து யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர், உடல்நலம் தேறிய நிலையில், கிரேன் மூலம் யானை நிற்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

யானைக் குட்டிக்காக கண்ணீர் விட்டு அழுத வனத்துறை.. கோவையில் நெகிழ்ச்சி சம்பவம்!

யானை

Follow Us On

குட்டி யானையை ஏற்காத தாய் யானை: கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஓட்டிய வனப்பகுதிகளில் காட்டு யானைகள், சிறுத்தைகள் உள்ளிட்ட விலங்களின் நடமாட்டம் அதிமாக இருக்கும். வனப்பகுதிக்குள் இருக்கும் காட்டு யானைகள் இரவில் உணவு, தண்ணீருக்காக வனப்பகுதியில் இருந்து கிராமங்களுக்குள் நுழைவது வழக்கமான ஒன்று. இதனை தடுப்பதற்கு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல, வனப்பகுதியியில் நடக்கும் குற்றச்செயல்களை கண்காணிக்கவும் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கோவை மருதமலை வனப்பகுதியில் கடந்த 20ஆம் தேதி 40 வயது பெண் யானையும், அதன் மூன்று மாத குட்டி யானையும் இருந்ததை வனத்துறையினர் பார்த்தனர். அப்போது, 40 வயதான பெண் யானைக்கு உடல்நலம் சரியில்லாமல் இருப்பது தெரியவந்ததது.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் வன கால்நடை அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர், மாவட்ட வன அலுவலர் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் ஆகியோருடன் குழு அமைத்து யானைக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண் யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர், உடல்நலம் தேறிய நிலையில், கிரேன் மூலம் யானை நிற்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

Also Read: குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. தெரிஞ்சுக்கோங்க!

இதனை அடுத்து கடந்த 3ஆம் தேதி வனப்பகுதிக்குள் பெண் யானை விடுவிக்கப்பட்டது. இதற்கிடையில், மூன்று மாத குட்டி யானை அப்பகுதியில் ஒரு யானை கூட்டத்துடன் இணைந்து சென்றதாக வனத்துறையினர் கூறினார். பின்னர், சிறிது நாட்களுக்கு பிறகு குட்டி யானை அந்த கூட்டத்துடன் பிரிந்து ஊருக்குள் சென்றது.  இந்த நிலையில், கடந்த 4ஆம் தேதி கூட்டத்தில் பிரிந்த வந்த குட்டி யானையை வனத்துறையினர் மீட்டு தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், குட்டி யானை அதன் தாய் யானையுடன் சேரவில்லை. இதற்காக பலகட்ட முயற்சிக்கு பின்னரும் தாய் யானையுடன் குட்டி யானை சேராததால், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து அனுபவம் உள்ள யானை பாகன்கள் வந்தனர்.


இருந்தாலும், குட்டி யானை அதன் தாய் யானையுடன் சேரவில்லை. இறுதிவரை தாய் யானை, குட்டியை ஏற்காத நிலையில், முகாமிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர். அதன்படி, நேற்று காலை குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது.   அங்கு குட்டி யானைக்கு தண்ணீர், உணவு கொடுத்து பத்திரமாக முகாமில் கொண்டு சென்றனர். குட்டி யானையை முகாமிற்குள் விட்ட வனத்துறையினர் அதனை பிரிய மனமில்லாமல் கண்ணீர் விட்டு அழுதனர். இது பார்ப்போரை நெகிழ்ச்சியடைய செய்தது.

Also Read: களத்தில் விஜய்.. மாணவர்களுக்கு பரிசளிக்கும் த.வெ.க தலைவர்!

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version