எடப்பாடி பிரசாரத்தில் வேட்பாளர் மாயம் – தென்காசி பிரசாரத்தில் பரபரப்பு
தென்காசி அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய எடப்பாடி பழனிச்சாமி, அங்கு வேட்பாளரை காணாமல் திடீரென திகைத்து நின்றார். தென்காசி மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய தமிழகம் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இந்தநிலையில் நேற்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரி தொகுதியில் பிரசாரம் செய்தார். பின்னர், இரவு 8.15 மணிக்கு தென்காசி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவிலில் பிரசார கூட்டத்திற்கு வந்தார். அப்போது கட்சியினரின் வரவேற்புக்கு மத்தியில் […]
தென்காசி அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய எடப்பாடி பழனிச்சாமி, அங்கு வேட்பாளரை காணாமல் திடீரென திகைத்து நின்றார்.
தென்காசி மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் புதிய தமிழகம் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இந்தநிலையில் நேற்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கன்னியாகுமரி தொகுதியில் பிரசாரம் செய்தார். பின்னர், இரவு 8.15 மணிக்கு தென்காசி மக்களவை தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவிலில் பிரசார கூட்டத்திற்கு வந்தார்.
அப்போது கட்சியினரின் வரவேற்புக்கு மத்தியில் மேடை ஏறிய அவர், புதிய தமிழகம் வேட்பாளரை காணாமல் திகைத்து நின்றார். அதிமுக நிர்வாகிகள் அவர் விரைந்து வந்து கொண்டிருப்பதாக எடப்பாடி பழனிச்சாமியிடம் தெரிவித்தனர். சுமார் 10 நிமிடங்கள் கழித்து மேடைக்கு வந்த புதிய தமிழகம் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில், ‘‘தென்காசி மக்களவை தொகுதிக்கு மனுத்தாக்கல் செய்ய பகல் ஒரு மணிக்கு சென்றேன். ஒரே நாளில் மனுத்தாக்கல் செய்ய 26 பேர் வந்ததால், மனுத்தாக்கல் செய்ய வெகு நேரமாகிவிட்டது. டோக்கன் பெற்று மாலையில் மனுத்தாக்கல் செய்த பிறகு, பொதுக்கூட்டத்திற்கு வருவதற்கு நேரமாகிவிட்டது. கூட்ட மேடைக்கு தாமதமாக வந்ததற்கு வருந்துகிறேன்.
தேர்தல் களத்தில் நான் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே அனைவரும், எந்த சின்னத்தில் போட்டியிட உள்ளீர்கள் என கேள்வி எழுப்பினர். அதிமுக தொண்டர்கள் உற்சாகத்திலும், மக்களின் வாக்குகளை பெறும் வகையில் நான் இம்முறை இரட்டை சிலை சின்னத்திலேயே போட்டியிட உள்ளேன்’’ என்றார்.