5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

திமுக எம்.பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை வழக்கு.. விசாரணையை தீவிரப்படுத்தும் குற்றப்பிரிவு போலீசார்..

கடந்த 2020 ஆம் ஆண்டு தயாநிதி மாறன் தலைமைச் செயலகத்தில் ஊடகத்திற்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், அப்போதைய முதன்மைச் செயலாளர் சண்முகம் ஐஏஎஸ் அவர்களை கொரோனா நிவாரண நிகழ்ச்சி தொடர்பாக மனு அளிக்க சென்றபோது தங்களை உரிய மரியாதை இல்லாமல் மூன்றாம் தர மக்களாக அதாவது தாழ்த்தப்பட்ட மக்களை (Schedule Caste) போன்று நடத்தியதாக பேட்டி அளித்தார்.

திமுக எம்.பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை வழக்கு.. விசாரணையை தீவிரப்படுத்தும் குற்றப்பிரிவு போலீசார்..
திமுக எம்.பி தயாநிதி மாறன்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 24 Jul 2024 11:02 AM

திமுக எம்.பி தயாநிதி மாறன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கு: திமுக எம்பி தயாநிதி மாறன் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோயமுத்தூர் காவல் நிலையத்தில் இருந்த வழக்கு, சென்னை மத்திய குற்ற பிரிவுக்கு மாற்றப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு தயாநிதி மாறன் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான டி ஆர் பாலு, கலாநிதி மற்றும் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் இணைந்து தலைமைச் செயலகத்தில் ஊடகத்திற்கு பேட்டி அளித்தனர். அப்போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், அப்போதைய முதன்மைச் செயலாளர் சண்முகம் ஐஏஎஸ் அவர்களை கொரோனா நிவாரண நிகழ்ச்சி தொடர்பாக மனு அளிக்க சென்றபோது தங்களை உரிய மரியாதை இல்லாமல் மூன்றாம் தர மக்களாக அதாவது தாழ்த்தப்பட்ட மக்களை (Schedule Caste) போன்று நடத்தியதாக பேட்டி அளித்தார்.

இதனால், கோயம்புத்தூர் சி.எம்.சி காலனி வெரைட்டி ஹால் சாலை பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் BH சாலை B3 காவல் நிலையத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை எம்பி தயாநிதி மாறன் இழிவுபடுத்தியதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் புகார் அளித்திருந்தார்.

Also Read:  தங்கம் விலை வரும் நாட்களில் குறையுமா? எவ்வளவு வரை எதிர்பார்க்கலாம்? நிபுணர்கள் கணிப்பு இதுதான்!

அதன் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மீது தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கோயமுத்தூர் B3 காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் வழக்கு விசாரணையின் சம்பவ இடம் சென்னை என்பதால் இவ்வழக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு சமீபத்தில் மாற்றப்பட்டுள்ளது.

இதன் பேரில் கோயமுத்தூர் B3 காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கானது சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று (23-07-2024) நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மீது தாழ்த்தப்பட்டோர்ருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மத்திய குற்ற பிரிவு போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Also Read: செல்போன் ஆடியோ.. கொலைக்கான சதி.. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வழக்கறிஞர் அருளிடம் மீண்டும் விசாரணை!

Latest News