மாணவியின் தற்கொலைக்கு மத மாற்றம் காரணமில்லை.. சிபிஐ திட்டவட்டம்! - Tamil News | CBI refused the allegation of BJP TN Leader Annamalai on school girl death issue | TV9 Tamil

மாணவியின் தற்கொலைக்கு மத மாற்றம் காரணமில்லை.. சிபிஐ திட்டவட்டம்!

Published: 

18 Sep 2024 18:54 PM

CBI Refused | அரியலூர் மாவட்டம், வடுகப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது 17வயதான மகள் லாவண்யா, அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில், மாணவி திடீரென தெற்கொலைக்கு முயன்ற நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

மாணவியின் தற்கொலைக்கு மத மாற்றம் காரணமில்லை.. சிபிஐ திட்டவட்டம்!

மாதிரி புகைப்படம்

Follow Us On

அரியலூரைச் சேர்ந்த பள்ளி மாணவி லாவண்யா என்பவர், மதம் மாற சொல்லி தொடர்ந்து வலியுறுத்தியதால் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாணவி லாவண்யா மரணத்திற்கும் மத மாற்ற முயற்சி காரணம் இல்லை என உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் சிபிஐ திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : BJP Government : 3வது முறையாக ஆட்சி அமைத்த பாஜக கூட்டணி.. 100 நாட்களில் செய்த சாதனைகள் என்ன?

தற்கொலை செய்துக்கொண்ட 17 வயது மாணவி

அரியலூர் மாவட்டம், வடுகப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவரது 17வயதான மகள் லாவண்யா, அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில், மாணவி திடீரென தெற்கொலைக்கு முயன்ற நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இந்த நிலையில் மாணவியின் தற்கொலைக்கு மத மாற்றம் தான் காரணம் என்று பாஜக போராட்டம் நடத்தியது. இந்த விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பரபரப்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இதையும் படிங்க : One Nation One Election : ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்.. ஒப்புதல் வழங்கிய மத்திய அமைச்சரவை!

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை

அரியலூர் மாவட்டம் படுகாபாளையம் கிராமத்தை சேர்ந்த முருகானந்தம் என்ற ஏழை விவசாயின் மகள் லாவண்யா வயது 17. இவர் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தூய இருதய மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு முதல் மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். பள்ளியில் மிக நன்றாக படிக்கும் இந்த மாணவி தற்போது 12ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க : TN Deputy CM : தமிழகத்தின் துணை முதலமைச்சர் யார் என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார் – உதயநிதி ஸ்டாலின்!

பள்ளி நிர்வாகத்தின் சார்பாக சிஸ்டர் சகாயம் என்பவர் இவரை மதமாற்றம் சொல்லி தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். மாணவியின் பெற்றோர்களையும் சந்தித்து அவர்கள் ஏழ்மையை பயன்படுத்தி மதம் மாற வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளார். மாணவியும் பெற்றோரும் இதற்கு ஒத்துழைக்காத காரணத்தால் மாணவியை படிக்க விடாது விடுதியின் கணக்கு வழக்குகளையும் மற்ற இதர வேலைகளையும் செய்ய மாணவியை கட்டாயப்படுத்தி தொடர்ந்து தொல்லைகள் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : PAN Card: ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருக்கலாமா? விதிகள் சொல்வது என்ன?

மதம் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தி பள்ளியில் கொடுத்த மன அழுத்தத்தால் மன உடைந்த மாணவி லாவண்யா தற்கொலை செய்து கொள்ள பள்ளியிலிருந்து விஷத்தன்மை கொண்ட திரவத்தை அருந்தியுள்ளார். தொடர்ந்து வாந்தியும் உடல்நல குறைவும் ஏற்பட்டதால் மாணவியை பெற்றோரிடம் பள்ளி நிர்வாகத்தினர் ஒப்படைத்துவிட்டனர். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல் மாணவி நேற்று மாலை மரணமடைந்துள்ளார்.

இதையும் படிங்க : பெரியாரை தொடாமல் யாரும் அரசியல் செய்ய முடியாது.. நண்பர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

பள்ளியின் ஹாஸ்டலில் தங்கி இருந்த மாணவி மரணத்தின் முன் பேசிய வீடியோ முழு பதிவு மனதை பதற வைக்கும். போலீசார் முதல் தகவல் அறிக்கை மரணத்திற்கு முன் மாணவி பேசிய வீடியோ பதிவிறக்கம் சம்மந்தம் இல்லாமல் இருக்கிறது. அதில் கட்டாயம் மதம் மாற்றம் செய்வதற்கான மாணவிக்கு கொடுக்கப்பட்ட மன அழுத்தத்தை பற்றி எந்த குறிப்பும் இல்லை என குறிபிட்டிருந்தார்.

உயர் நீதிமன்றத்தில் சிபிஐ திட்டவட்டம்

இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மாணவியின் தற்கொலைக்கு மத மாற்றம் காரணமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ திட்டவட்டமாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version