”எண்ணிலடங்கா அனிதாக்கள்.. நீட் தேர்வை ஒழிக்க வேண்டும்” முதல்வர் ஸ்டாலின்! - Tamil News | | TV9 Tamil

”எண்ணிலடங்கா அனிதாக்கள்.. நீட் தேர்வை ஒழிக்க வேண்டும்” முதல்வர் ஸ்டாலின்!

Updated On: 

16 Jun 2024 13:33 PM

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, "நீட் தேர்வு தொடர்பாக நடந்து வரும் சர்ச்சைகள் அதன் அடிப்படையில் சமத்துவமின்மை தன்மையை எடுத்துக்காட்டுகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு வரும் சமுதாயத்தில், ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்திற்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும். மாறாக, அத்தகைய மாணவர்களின் வாய்ப்பை நீட் தடுக்கிறது. தேசிய தேர்வு முகமைக்கு (NTA) மத்திய கல்வி அமைச்சர் ஆதரவு தெரிவித்த போதிலும், சமீபத்திய நிகழ்வுகள் வித்தியாசமான படத்தை வரைகின்றன. பல கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகள் மற்றும் எட்டு வெற்று காசோலைகளுக்கான ஓஎம்ஆர் தாள்களை கண்காணிப்பாளர்கள் சேதப்படுத்தியதாக குஜராத் காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது” என்றார்.

”எண்ணிலடங்கா அனிதாக்கள்.. நீட் தேர்வை ஒழிக்க வேண்டும்” முதல்வர் ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின்

Follow Us On

”நீட் தேர்வை ஒழிக்க வேண்டும்” தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, “நீட் தேர்வு தொடர்பாக நடந்து வரும் சர்ச்சைகள் அதன் அடிப்படையில் சமத்துவமின்மை தன்மையை எடுத்துக்காட்டுகின்றன. பல ஆயிரம் ஆண்டுகளாக கல்வி மறுக்கப்பட்டு வரும் சமுதாயத்தில், ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்திற்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும். மாறாக, அத்தகைய மாணவர்களின் வாய்ப்பை நீட் தடுக்கிறது. தேசிய தேர்வு முகமைக்கு (NTA) மத்திய கல்வி அமைச்சர் ஆதரவு தெரிவித்த போதிலும், சமீபத்திய நிகழ்வுகள் வித்தியாசமான படத்தை வரைகின்றன. பல கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகள் மற்றும் எட்டு வெற்று காசோலைகளுக்கான ஓஎம்ஆர் தாள்களை கண்காணிப்பாளர்கள் சேதப்படுத்தியதாக குஜராத் காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

ஒரு பள்ளி முதல்வர், ஒரு இயற்பியல் ஆசிரியர் மற்றும் பல நீட் பயிற்சி மையங்கள் சம்பந்தப்பட்ட இந்த சதி, முறையான மாற்றத்திற்கான அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தியாகி அனிதா முதல் எண்ணற்ற மாணவர்கள் வரை பரிதாபமாகத் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதை நாம் நேரில் பாத்திருக்கிறோம். தகுதியின் அளவுகோலாக கருதப்படும் நீட் தேர்வு, சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் பாதிக்கும் ஒரு பரவரான மோசடியாக மீண்டும் மீண்டும் தன்னை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாணவர் விரோத, சமூக நீதிக்கு எதிராக, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Also Read: சென்னையில் போக்குவரத்து மாற்றம்.. இந்த வழியெல்லாம் முற்றிலும் தடை.. நோட் பண்ணிக்கோங்க!

நீட் தேர்வு குற்றச்சாட்டு:

எம்பிபிஎஸ், பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு நீட் தேர்வு 4,750 மையங்களில் கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை 23 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர்.  இந்த தேர்வு முடிவுகள் இந்த மாதம் 4-ந்தேதி வெளியான நிலையில், வினாத்தாள் கசிவு, மதிப்பெண் மோசடி, கருணை மதிப்பெண், ஒரே தேர்வு மையத்தில் எழுதியவர்கள் அடுத்தடுத்து ஒரே மதிப்பெண், அதிகபட்சமாக 67 பேர் முழுமதிப்பெண் பெற்று முதலிடம், முன்கூட்டியே தேர்வு முடிவுகள் வெளியீடு என அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

சுமார் 24 லட்சம் மாணவர்கள் எழுதிய தேர்வில் மிகப்பெரிய மோசடி அரங்கேறியுள்ளதாக  பெற்றோர்கள், கல்வியாளர்கள் என பத்துக்கும் மேற்பட்டோர் உச்ச நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட எதிர்க்கட்சிகள், கல்வியாளர்கள் பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றன.

Also Read: “Wait and See” சட்டமன்ற தேர்தல் குறித்து சஸ்பென்ஸ் வைத்து பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின்!

 

வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
Exit mobile version