செங்கல்பட்டு அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து… 4 பேர் உயிரிழப்பு!
Road Accident: விபத்து காரணமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு பிறகே விபத்துக்குள்ளான வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் இருந்து சென்னை பூந்தமல்லிக்கு கிரானைட் கற்களை ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது. அப்போது திருச்சியில் இருந்து சென்னை நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று வந்தது. அதி வேகமாக வந்துகொண்டிருந்த அந்த ஆம்னி பேருந்து பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் மீது வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆம்னி பேருந்தின் முன்பக்கம் முழுவதுமாக நொறுங்கியது. இந்த கோர விபத்தில் ஆம்னி பேருந்தில் இருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதற்கிடையே, விபத்தில் சிக்கிய ஆம்னி பஸ்சின் பின் பக்கம், முசிறியில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த அரசு விரைவு பஸ் ஒன்று மோதியது. இந்த விபத்துகளில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்த படாளம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர், வாகனத்தை அப்புறப்படுத்தும் பணியும் மற்றும் வாகனத்துக்குள் சிக்கி இருக்கும் உடல்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த கோர விபத்து காரணமாக, அப்பகுதியில் பெரும் பரபரப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Also read… திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்!
விபத்து காரணமாக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 3 மணி நேரத்திற்கு பிறகே விபத்துக்குள்ளான வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.