Chennai Air Show: சென்னை விமான சாகச நிகழ்ச்சிக்கு சென்ற 5 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. 100 பேருக்கு சிகிச்சை!
சென்னையில் இன்று நடந்த விமான சாகச நிகழ்ச்சிக்கு சென்ற 5 பேர் உயிரிழந்ததது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொளுத்தும் வெயிலில் விமான சாகச நிகழ்ச்சிக்கு சென்ற இவர்கள் திடீரென மயக்கம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் இன்று நடந்த விமான சாகச நிகழ்ச்சிக்கு சென்ற 5 பேர் உயிரிழந்ததது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொளுத்தும் வெயிலில் விமான சாகச நிகழ்ச்சிக்கு சென்ற இவர்கள் திடீரென மயக்கம் அடைந்துள்ளனர். இதனை அடுத்து இவர்களை மீட்டு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு இவர்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், விமான சாகச நிகழ்ச்சிக்கு சென்ற 90க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் இன்று பிரமாண்ட விமான வான் சாகச நிகழ்ச்சி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.
சென்னை விமான சாகச நிகழ்ச்சியில் சோகம்:
சென்னையில் கடந்த 2003ஆம் ஆண்டு விமான சாகச நிகழ்ச்சி நடந்த நிலையில், 21 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் சென்னையில் இன்று நடைபெற்றது.
இதில் 72 விமானங்கள் கலந்து கொண்டன. அதன்படி, சுகோய்-30 எம்கேஐ, ரஃபேல், மிராஜ் 2000, மிக்-29 மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போன்ற போர் விமானங்கள் சாகசத்தை நிகழ்த்தின.
வானிலை வட்டமிட்ட ஹெலிகாப்டர்கள் வானில் இதயம் வரைந்து பார்வையாளர்களை ரசிக்க வைத்தன. மேலும், அதிரவைக்கும் ஓசையுடன் ஐந்து ஹெலிகாப்டர்கள் புகையை உமிழ்ந்தபடி வானிலை வலம் வந்தன. வானில் கழன்று கழன்று வந்தும் மேலே கீழுமாக பறந்தும் பார்வையாளர்களை ஹெலிகாப்டர்கள் வெகுவாக கவர்ந்தன.
Also Read: ரக ரகமாய் பறந்த விமானங்கள்.. மெரினாவை அதிரவைத்த விமான சாகசம்!
நிகழ்ச்சி தொடங்கியதும் ஆகாஷ் கங்கா குழுவினர் 2000 அடி உயரத்தில் இருந்த பாராசூட்டில் குதித்து பார்வையாளர்களை உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து, அதிகவேக விமானமாக ரபேல், புயல் என்ற பெயரில் சூப்பர் சோனிக் ஓட்டத்தை நிகழ்த்தியது. தீப்பொறிகளை உமிழ்ந்தபடி, சூப்பர் சோனிக் ஓட்டத்தை நிகழ்த்தியது.
அதேபோல சேரர், பாண்டியர், சோழர், காஞ்சி நடராஜன், பல்லவர் என குழக்களாக பிரிந்து தேஜஸ், ஜாக்குவார் உள்ளிட்ட விமானங்கள் சாகசத்தை நிகழ்த்தின. இதனை லட்சக்கணக்கானோர் பங்கேற்று விமான சாகச நிகழ்வை நேரில் கண்டுகளித்தனர்.
5 பேர் உயிரிழப்பு:
இன்று சென்னை மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றதை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் மக்கள் மெரினாவில் நோக்கி பேருந்து, இருசக்கர வாகனம், 4 சக்கர வாகனங்களில் சென்றனர். குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என லட்சக்கணக்காணோர் கலந்து கொண்டனர்.
கொளுத்தும் வெயிலையும் நினைக்காமல் மக்கள் கூட்டம் மெரினாவில் அலைமோதியது. மக்கள் குடைகளுடன் மெரினா சென்று, விமான சாகச நிகழ்ச்சியை பார்த்தனர். சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் மெரினாவில் குவிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கூட்ட நெரிசனல் அதிகமாகவே இருந்தது. ஒரு பக்கம் வெயில். மறுபக்கம் கூட்டம் என மெரினாவை ஸ்பிதம்பித்தது.
சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்டோர் சாகச நிகழ்ச்சியை பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விமான சாகச நிகழ்ச்சியில் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்துள்ளனர். இவர்களை மீட்டு போலுசார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகின்றவர். இவர்களில் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
Also Read: ” நாங்கள் சமத்துவத்துடன் நிற்கிறோம்” – பவன் கல்யாணை விமர்சித்து பேசிய நடிகர் பிரகாஷ் ராஜ்..
பெருங்களத்தூரைச் சேர்ந்த சீனிவாசன் (48), திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (34), கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான் (56), ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், 230 பேருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாகவும், 93 நபர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. விமான சாகச நிகழ்ச்சிக்கு சென்ற இடத்தில் 5 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.