Chennai Air Show: கதி கலங்கிய மெரினா.. தண்ணீர் இன்றி தவித்த மக்கள்.. திணறிய காவல்துறை! - Tamil News | Chennai air show 2024 lakhs of people stranded on streets without water 230 admitted hospital due to dehydration chennai | TV9 Tamil

Chennai Air Show: கதி கலங்கிய மெரினா.. தண்ணீர் இன்றி தவித்த மக்கள்.. திணறிய காவல்துறை!

Updated On: 

06 Oct 2024 22:24 PM

சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சிக்கு சென்ற 5 பேர் உயிரிழந்ததுள்ளனர். மேலும் 230 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நீர்ச்சத்து குறைபாடு காரணமாக பலரும் மயக்கம் அடைந்துள்ளனர். இதுவரை 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

Chennai Air Show: கதி கலங்கிய மெரினா.. தண்ணீர் இன்றி தவித்த மக்கள்.. திணறிய காவல்துறை!

சென்னை விமனா சாகச நிகழ்வு (picture credit: PTI)

Follow Us On

சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சிக்கு சென்ற 5 பேர் உயிரிழந்ததுள்ளனர். மேலும் 230 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நீர்ச்சத்து குறைபாடு காரணமாக பலரும் மயக்கம் அடைந்துள்ளனர். இதுவரை 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் 230 பேருக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சாகச நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு போதுமான குடிநீர் வசிதி போன்றவை இல்லாமல் இருந்ததை காரணம் என்று கூறப்படுகிறது. சாகச நிகழ்ச்சிக்கு வந்தவர்களில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இதுவரை 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

கதி கலங்கிய மெரினா

பெருங்களத்தூரைச் சேர்ந்த சீனிவாசன் (48), திருவொற்றியூரைச் சேர்ந்த கார்த்திகேயன் (34), கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஜான் (56), ஆகியோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  விமானப்படை தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் இன்று பிரமாண்ட விமான வான் சாகச நிகழ்ச்சி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.

சென்னையில் கடந்த 2003ஆம் ஆண்டு விமான சாகச நிகழ்ச்சி நடந்த நிலையில், 21 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் சென்னையில் இன்று நடைபெற்றது.
இதில் 72 விமானங்கள் கலந்து கொண்டன. அதன்படி, சுகோய்-30 எம்கேஐ, ரஃபேல், மிராஜ் 2000, மிக்-29 மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போன்ற போர் விமானங்கள் சாகசத்தை நிகழ்த்தின.

வானிலை வட்டமிட்ட ஹெலிகாப்டர்கள் வானில் இதயம் வரைந்து பார்வையாளர்களை ரசிக்க வைத்தன. மேலும், அதிரவைக்கும் ஓசையுடன் ஐந்து ஹெலிகாப்டர்கள் புகையை உமிழ்ந்தபடி வானிலை வலம் வந்தன. வானில் கழன்று கழன்று வந்தும் மேலே கீழுமாக பறந்தும் பார்வையாளர்களை ஹெலிகாப்டர்கள் வெகுவாக கவர்ந்தன.

Also Read: சென்னை விமான சாகச நிகழ்ச்சிக்கு சென்ற 5 பேர் அடுத்தடுத்து உயிரிழப்பு.. 100 பேருக்கு சிகிச்சை!

தண்ணீர் இன்றி தவித்த மக்கள்

இன்று சென்னை மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி நடைபெற்றதை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் மக்கள் மெரினாவில் நோக்கி பேருந்து, இருசக்கர வாகனம், 4 சக்கர வாகனங்களில் சென்றனர். குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என லட்சக்கணக்காணோர் கலந்து கொண்டனர்.

கொளுத்தும் வெயிலையும் நினைக்காமல் மக்கள் கூட்டம் மெரினாவில் அலைமோதியது. மக்கள் குடைகளுடன் மெரினா சென்று, விமான சாகச நிகழ்ச்சியை பார்த்தனர். சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் மெரினாவில் குவிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கூட்ட நெரிசனல் அதிகமாகவே இருந்தது. ஒரு பக்கம் வெயில். மறுபக்கம் கூட்டம் என மெரினாவை ஸ்பிதம்பித்தது.

சுமார் 10 லட்சத்திற்கு மேற்பட்டோர் சாகச நிகழ்ச்சியை பார்த்ததாக கூறப்படுகிறது.  இதனால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த இயலவில்லை என்று கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் சிக்கி பலரும் மயங்கி விழுந்துள்ளனர்.

எதிர்க்கட்சிகள் கண்டனம்:

இதுவரை 100க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது ஆளும் திமுக அரசிற்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.   மேலும், சரியான திட்டமிடல், தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லாத காரணத்தால் இதுபோன்ற  உயிரிழப்புகள் நடந்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டி உள்ளனர்.  இதற்கு ஆளும் திமுக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு எதிக்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “இந்திய பாதுகாப்புத் துறையின் முக்கிய அங்கங்களுள் ஒன்றான இந்திய விமானப் படையின் 92வது துவக்க நாள் விழாவை முன்னிட்டு, விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் வண்ணம் சென்னையில் இன்று வான் சாகச நிகழ்ச்சி அரங்கேறியது.

இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியான நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடக் கூடுவர் என்பது அறிந்து, போக்குவரத்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும், இன்றைய நிகழ்ச்சியில் நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும்,
கூட்டத்தையும் போக்குவரத்தையும் ஒழுங்கு படுத்துவதற்கு காவல்துறையினரும் போதிய அளவில் இல்லாததால், மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீர் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, மேலும் வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியும் , மிகுந்த வேதனையும் அளிக்கின்றன.

Also Read: ரெடியா மக்களே.. தொடங்கப்போகுது வடகிழக்கு பருவமழை.. எப்போது தெரியுமா? வானிலை மையம் அறிவிப்பு!

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் வருத்தங்களும். இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக் கூட முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாகச் சீர்கேடே உருவான விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள். இந்நிகழ்வுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய இந்த  ஸ்டாலின் அரசுக்கு அரசுக்கு என் கடும் கண்டனங்கள்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பிரச்சனை இருந்தால் கொய்யாப்பழம் சாப்பிடக்கூடாதாம்..
தினமும் வெல்லம் கலந்த பால் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?
பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள காலிஃபிளவர்..!
உடலுக்கு ஊட்டச்சத்துகளை தாராளமாக தரும் புளி..
Exit mobile version