Chennai Air Show: மெரினாவில் மக்கள் அலை.. விமான சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்.. 20 பேருக்கு மயக்கம்! - Tamil News | Chennai air show 2024 marina stucked with heavy crowd more than 20 peoples fainted in crowd marina | TV9 Tamil

Chennai Air Show: மெரினாவில் மக்கள் அலை.. விமான சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்.. 20 பேருக்கு மயக்கம்!

Updated On: 

06 Oct 2024 14:04 PM

சென்னை மெரினாவில் விமான சாசக நிகழ்ச்சிக்கு சென்ற 20க்கும் மேற்பட்டோருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

Chennai Air Show: மெரினாவில் மக்கள் அலை.. விமான சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்.. 20 பேருக்கு மயக்கம்!

சென்னை விமான சாகச நிகழ்ச்சி

Follow Us On

சென்னை மெரினாவில் விமான சாசக நிகழ்ச்சிக்கு சென்ற 20க்கும் மேற்பட்டோருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று காவல்துறை அறிவுரை வழங்கியுள்ளது. இந்திய விமானப் படையின் 92ஆம் ஆண்டு தினத்தையொட்டி, சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணிக்கு பிரம்மாண்டமாக விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னையில் கடந்த 2003ஆம் ஆண்டு விமான சாகச நிகழ்ச்சி நடந்த நிலையில், 21 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் சென்னையில் இன்று நடைபெற்றது.

விமான சாகச நிகழ்ச்சி

பொதுவாக விமானப்படை சாகச நிகழ்ச்சிகள் டெல்லியில் நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு சென்னை தேர்ந்தெடுக்கப்பட்டது. இதற்காக கடந்த 3 நாட்களாக முன்கூட்டியே ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்த நிலையில், இன்று பிரம்மாண்டமாக காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை விமான சாகசம் நடந்தது.

இதில் 72 விமானங்கள் கலந்து கொண்டன.  அதன்படி, சுகோய்-30 எம்கேஐ, ரஃபேல், மிராஜ் 2000, மிக்-29 மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போன்ற போர் விமானங்கள் சாகசத்தை நிகழ்த்தின.

போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் Mi-17 மற்றும் பிரசாந்த் LCH (இலகுவான போர் ஹெலிகாப்டர்) போன்ற ஹெலிகாப்டர்கள், டகோட்டா மற்றும் ஹார்வர்ட் போன்ற பாரம்பரிய விமானங்களும் சாகச நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்டன.

Also Read; மழைக்கு ரெடியா மக்களே..! 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..

மக்கள் அலையில் மெரினா:

இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னை மெரினாவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது. சுமார் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்ப பணியில் ஈடுபட்டனர். இந்த வான் சாகச நிகழ்ச்சியை காண பொதுமக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டது.

விஐபிக்கள், சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டுமே கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் அனைவருமே திறந்தவெளியில் நின்று தான் இந்த நிகழ்ச்சியை காண முடியும். இந்த நிலையில், இன்று நடந்த விமான சாகச நிகழ்ச்சியை காண ஏராளமான மக்கள் மெரினாவில் குவிந்தனர். இதனால் மெரினாவே ஸ்தம்பித்தது.

கொளுத்தும் வெயிலையும் நினைக்காமல் மக்கள் கூட்டம் மெரினாவில் அலைமோதியது. மக்கள் குடைகளுடன் மெரினா சென்று, விமான சாகச நிகழ்சசியை கண்டு களித்தனர். குறிப்பாக இன்று ஞாயிற்றுகிழமை என்பதால் மக்கள் அதிகளவு குவிந்தனர். இதனால், சென்னை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் மெரினாவில் குவிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கூட்ட நெரிசனல் அதிகமாகவே இருந்தது. ஒரு பக்கம் வெயில். மறுபக்கம் கூட்டம் என மெரினாவை ஸ்பிதம்பித்தது.

இந்த நிலையில், இன்று நடந்த விமான சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. குழந்தைகள், பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த போலீசார் அவர்களை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போக்குவரத்து மாற்றம்:

இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை காமராஜர் சாலையில் காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையேயான பகுதியில் அனுமதிச்சீட்டு உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். தங்களது வாகனங்களை பார்க்கிங் செய்ய ஆர் கே சாலைக்கு பதிலாக வாலாஜா சாலையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அண்ணா சாலையிலிருந்து சென்னை மாநகர பேருந்துகள் வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ரத்னா கபே சந்திப்பும் ஐஸ் அவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம். தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

Also Read: ”சிறைச்சாலை எனும் பல்கலைக்கழகத்தில் படித்தவர்கள்.. எந்த அரட்டலுக்கும் பயப்பட மாட்டோம்” – முதலமைச்சர் ஸ்டாலின்..

வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணா சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை, வாலாஜா சாலை, கதிட்ரல் சாலையில் காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை செல்ல தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.

பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ள காலிஃபிளவர்..!
உடலுக்கு ஊட்டச்சத்துகளை தாராளமாக தரும் புளி..
தூங்குவதற்கு முன் மறக்காமல் செய்ய வேண்டிய விஷயங்கள்
நாம் அதிகமாக சர்க்கரை எடுத்துக்கொள்வதற்கான அறிகுறிகள்..!
Exit mobile version