Chennai Air Show: மெரினாவில் நடைபெறும் வான் சாகச நிகழ்ச்சி.. எங்கே ? எப்படி பார்ப்பது? ஏற்பாடுகள் தீவிரம்..

வான் சாகச நிகழ்ச்சியை காண பொதுமக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. விஐபிக்கள், சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டுமே கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் அனைவருமே திறந்தவெளியில் நின்று தான் இந்த நிகழ்ச்சியை காண முடியும். பொதுமக்களுக்கு இலவச அனுமதி என்பதால் சுமார் 15 பேர் வருகை தருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அங்கு வரும் பொது மக்களுக்கு பொதுக்கழிப்பறை வசதிகளுடன், SHE டாய்லெட் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Chennai Air Show: மெரினாவில் நடைபெறும் வான் சாகச நிகழ்ச்சி.. எங்கே ? எப்படி பார்ப்பது? ஏற்பாடுகள் தீவிரம்..

விமான சாகச நிகழ்ச்சி

Published: 

06 Oct 2024 07:50 AM

இந்திய விமானப்படையின் 92 ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி அக்டோபர் 6 தேதி இன்று விமானப்படையில் வான் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரை நடைபெறுகிறது. இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி கடந்த வாரம் முதல் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் தயாரிக்கபட்ட தேஜஸ், பிரசாந்த், ஹச் டி டி 40, உள்ளிட்ட விமானங்களும், இந்தியாவின் முக்கிய போர் விமானங்களான ரபேல் உள்ளிட்ட விமானங்களும் கலந்துக்கொள்ள உள்ளது. அந்த வகையில் 21 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தமிழ்நாடு அமைச்சர்கள், ஆளுநர் ஆர். என் ரவி, முப்படை தளபதிகள், முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துக்கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் மிகவும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மொத்தம் 72 விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன. அதன்படி, சுகோய்-30 எம்கேஐ, ரஃபேல், மிராஜ் 2000, மிக்-29 மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போன்ற போர் விமானங்கள் சாகசம் நிகழ்த்த உள்ளன. போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் Mi-17 மற்றும் பிரசாந்த் LCH (இலகுவான போர் ஹெலிகாப்டர்) போன்ற ஹெலிகாப்டர்கள், டகோட்டா மற்றும் ஹார்வர்ட் போன்ற பாரம்பரிய விமானங்களும் சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளன. இந்த சாகச நிகழ்ச்சி காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1 மணி வரை நடைபெறுகிறது. இந்திய விமானப்படையின் சாரங், சூரியகிரண் குழு உள்ளிட்டவை இதில் பங்கேற்கும்.

இந்த வான் சாகச நிகழ்ச்சியை காண பொதுமக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்படுகிறது. விஐபிக்கள், சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டுமே கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது. மற்றவர்கள் அனைவருமே திறந்தவெளியில் நின்று தான் இந்த நிகழ்ச்சியை காண முடியும். பொதுமக்களுக்கு இலவச அனுமதி என்பதால் சுமார் 15 பேர் வருகை தருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அங்கு வரும் பொது மக்களுக்கு பொதுக்கழிப்பறை வசதிகளுடன், SHE டாய்லெட் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு சுமார் 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் படிக்க:  ஹரியானா, ஜம்மு காஷ்மீரில் பாஜகவுக்கு ஷாக்.. திரும்பி அடிக்கும் காங்கிரஸ்.. Exit poll சொல்வது என்ன?

போக்குவரத்து மாற்றம்:

இந்திய விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சியை ஒட்டி சென்னை மெரினாவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அதாவது வழக்கமாக மெரினா சர்வீஸ் சாலையில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாறாக,

  • சென்னை காமராஜர் சாலையில் காந்தி சிலை மற்றும் போர் நினைவிடம் இடையேயான பகுதியில் அனுமதிச்சீட்டு உள்ள வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். தங்களது வாகனங்களை பார்க்கிங் செய்ய ஆர் கே சாலைக்கு பதிலாக வாலாஜா சாலையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
  • திருவான்மியூரில் இருந்து காமராஜர் சாலை வழியாக பாரிஸ் கார்னர் நோக்கி வாகனங்கள் வருவதற்கு தடை செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய சர்தார் படேல் சாலை, காந்தி மண்டபம், அண்ணா சாலையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதே போல் பாரிஸ் கார்னரில் இருந்து வரும் திருவான்மியூர் நோக்கி செல்லும் வாகனங்களும் தங்களுடைய இலக்கினை அடைய அண்ணா சாலை, தேனாம்பேட்டை, காந்தி மண்டபம் வழியாக செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
  • அண்ணா சாலையிலிருந்து சென்னை மாநகர பேருந்துகள் வாலாஜா சாலை, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ரத்னா கபே சந்திப்பும் ஐஸ் அவுஸ் சந்திப்பு, டாக்டர் நடேசன் சாலை, ஆர்.கே.சாலை, வி.எம். தெரு, மந்தைவெளி, மயிலாப்பூர் வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
  • இதேபோல் கிரீன்வேஸ் பாயிண்டில் இருந்து வரும் வாகனங்கள் மந்தைவெளி, ராஜா அண்ணாமலைபுரம் இரண்டாவது பிரதான சாலை, டிடிகே சாலை, ஆர்.கே.சாலை, அண்ணா சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.
  • வணிக வாகனங்கள் காமராஜர் சாலை, அண்ணா சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, ஆர்.கே.சாலை, வாலாஜா சாலை, கதிட்ரல் சாலையில் காலை 7:00 மணி முதல் மாலை 4 மணி வரை செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வெளிய போறீங்களா? காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. கனமழை எச்சரிக்கை எங்கே?

பார்க்கிங் வசதிகள்:

இந்த பார்க்கிங் வசதிகள் காலை 9.30 மணிக்கு மூடப்படும். எனவே வான் சாகச நிகழ்ச்சியை காண விரும்பும் மக்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக வருகை தர வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காமராஜர் சாலை: கடற்கரை சாலை (விஐபி மற்றும் விவிஐபி கார் பார்க்கிங்), பிரசிடென்சி கல்லூரி, சுவாமி சிவானந்த சாலை,
லேடி வெலிங்டன் கல்லூரி ( நீல வண்ண பாஸ் மட்டும்)
சாந்தோம் சாலை: காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் சிஎஸ்ஐ பள்ளி, செயின்ட் பெட்ஸ் மேல்நிலைப்பள்ளி, புனித சாந்தோம் பள்ளி, செயின்ட் பெட்ஸ் மைதானம், கதிட்ரல் ஆரம்பப்பள்ளி, சாந்தோம் சமுதாயக்கூடம், லூப் ரோடு (ஒரு பக்கம் மட்டும்)
ஆர்கே சாலை: MRTS லைட் ஹவுஸ் சாலை, என்கேடி பள்ளி (ஐஸ் ஹவுஸ் சந்திப்பு), குயின் மேரிஸ் கல்லூரி, புனித எபாஸ் பள்ளி
வாலாஜா சாலை: கலைவாணர் அரங்கம், ஓமாந்தூரார் மருத்துவமனை (பிரஸ் கிளப் சாலையின் நுழைவு), விக்டோரியா விடுதி மைதானம்
அண்ணா சாலை: தீவுத்திடல் மைதானம், pwd மைதானம் (தலைமைச் செயலகம் எதிரில்), மன்றோ சாலை முதல் பல்லவன் சாலை சந்திப்பு வரை, MRTS சிந்தாதிரிப்பேட்டை.

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?