விமானத்தில் ஜிபிஎஸ் கருவி எடுத்து செல்ல முயன்ற பயணி.. அதிரடியாக பறிமுதல் செய்த அதிகாரிகள்..
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராமச்சந்திரா (35) என்பவர், இந்த விமானத்தில் எத்தியோப்பியா நாட்டிற்கு செல்வதற்காக வந்திருந்தார். அவருடைய கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதித்த போது, அந்த கைப்பையில், விமானத்துக்குள் எடுத்துச் செல்ல கூடாத பொருள் ஏதோ இருப்பதாக, எச்சரிக்கை மணி ஒலித்தது.
சென்னையில் இருந்து எத்தியோப்பியா நாட்டிற்கு, விமானத்தில் பயணம் செய்ய வந்த புவியியல் துறை ஊழியரின் பயணத்தை, விமான நிலைய பாதுகாப்ப அதிகாரிகள் ரத்து செய்து பயணியை, சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அந்த புவியியல் துறை ஊழியரான பயணி, விமானத்தில் எடுத்து செல்ல தடை செய்யப்பட்டுள்ள ஜிபிஎஸ் கருவியை, தனது கைப்பையில் வைத்திருந்ததால், பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையில் கண்டுபிடித்து, ஜிபிஎஸ் கருவியை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர். சென்னையில் இருந்து எத்தியோப்பியா நாட்டு தலைநகர் அடிஸ் அபாபா செல்லும் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகளின் உடைமைகளையும், பயணிகளையும், சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்து, பயணிகளை விமானத்துக்கு அனுப்பி கொண்டு இருந்தனர்.
மேலும் படிக்க: திமுக மீதான விமர்சனத்தில் கவலை இல்லை – விசிக தலைவர் திருமாவளவன்..
அப்போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராமச்சந்திரா (35) என்பவர், இந்த விமானத்தில் எத்தியோப்பியா நாட்டிற்கு செல்வதற்காக வந்திருந்தார். அவருடைய கைப்பையை பாதுகாப்பு அதிகாரிகள் ஸ்கேன் மூலம் பரிசோதித்த போது, அந்த கைப்பையில், விமானத்துக்குள் எடுத்துச் செல்ல கூடாத பொருள் ஏதோ இருப்பதாக, எச்சரிக்கை மணி ஒலித்தது. இதை அடுத்து பாதுகாப்பு அதிகாரிகள், அவருடைய கைப்பையை தனியே எடுத்து வைத்து திறந்து பார்த்து சோதித்தனர். அதனுள் ஜிபிஎஸ் கருவி ஒன்று இருப்பதை கண்டுப்பிடித்தனர்.
இதை அடுத்து ராமச்சந்திராவை விமானத்துக்கு அனுப்பாமல், நிறுத்தி வைத்து விசாரணை நடத்தினர். அப்போது ராமச்சந்திரா தான் புவியியல் துறையில் பணியாற்றுவதாகவும், தனது பணியின் நிமித்தம், இந்த கருவியை எடுத்து செல்வதாகவும் கூறினார். ஆனால் பாதுகாப்பு அதிகாரிகள் அவருடைய விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. விமான பாதுகாப்புச் சட்டத்தின் படி, ஜிபிஎஸ் கருவியை விமானத்தில் எடுத்து செல்லக்கூடாது என்று கூறி அந்த கருவியை பறிமுதல் செய்தனர். அதோடு ராமச்சந்திரா விமான பயணத்தையும் ரத்து செய்தனர்.
மேலும் படிக்க: தாமதமாகும் ஃபெங்கல் புயல்.. கனமழை இருக்குமா? வானிலை சொல்லும் தகவல் என்ன?
அதன் பின்பு பாதுகாப்பு அதிகாரிகள், பயணி ராமச்சந்திராவையும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஜிபிஎஸ் கருவியையும், சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விமான நிலைய போலீசார் ராமச்சந்திராவிடம் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர். ஜிபிஎஸ் கருவி விமானத்தில் எடுத்துச் செல்லக்கூடாது என்ற சட்ட விதி இருக்கிறது. ஆனால் அவ்வாறு எடுத்துச் செல்வது மிகப் பெரிய குற்றம் கிடையாது. எனவே அவரிடம் முழுமையாக விசாரணை நடத்தி விட்டு, அந்தக் கருவியை, அவர் சார்ந்த யாரிடமாவது கொடுக்க செய்துவிட்டு, அந்தப் பயணி வேறு விமானம் மூலம், எத்தியோப்பியா நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவார் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
ஆனாலும் சென்னை விமான நிலையத்தில், புவியியல் துறை ஊழியர் ஒருவர், ஜிபிஎஸ் கருவி எடுத்துச் சென்றதற்காக, ஜிபிஎஸ் கருவி பறிமுதல் செய்யப்பட்டு, விமான பயணமும் ரத்து செய்யப்பட்டு, சென்னை விமான நிலைய போலீசில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.