மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த நபர் உயிரிழப்பு.. சென்னையில் மீண்டும் நடந்த சோகம்..
சென்னை அசோக் பில்லர் பகுதியில் சாலையில் தோண்டப்பட்டுள்ள மழை நீர் வடிகால் பணி பள்ளத்தில் வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்து உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து அசோக் பில்லர் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் மழை நீர் வடிகால் பணிகள் வெகு நாட்களாக நடைபெற்று வருகின்றன. 10 அடிக்கு 10 அடி தோன்றி பணிகள் நிறைவு பெற்று அடுத்த 10 அடி தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னையில் மீண்டும் மழை நீர் வடிகாலில் விழுந்து மேலும் ஒரு உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. நெடுஞ்சாலை துறையின் மெத்தன போக்கே உயிரிழப்புக்கு காரணம் என பகுதி வாசிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். சென்னை அசோக் பில்லர் பகுதியில் சாலையில் தோண்டப்பட்டுள்ள மழை நீர் வடிகால் பணி பள்ளத்தில் வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்து உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் இருந்து அசோக் பில்லர் நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் மழை நீர் வடிகால் பணிகள் வெகு நாட்களாக நடைபெற்று வருகின்றன. 10 அடிக்கு 10 அடி தோன்றி பணிகள் நிறைவு பெற்று அடுத்த 10 அடி தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த மழை வெள்ளத்தின் போது தனியார் தொலைக்காட்சி சேர்ந்த நபர் ஒருவர் இதே நெடுஞ்சாலையில் மழை நீர் வடிகால் பணியின் போது தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த நிலையில் மீண்டும் அதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. உதயம் திரையரங்கம் அருகே தோண்டப்பட்டுள்ள பள்ளத்தில் அருகில் இருக்கும் அம்பேத்கர் நகர் பகுதியில் சேர்ந்த ஐயப்பன் என்கிற இளைஞர் தனது வீட்டின் அருகில் இருக்கக்கூடிய குழந்தை மற்றும் செல்ல பிராணியுடன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.
மேலும் படிக்க: பிரதமர் பாராட்டிய மதுரை பெண்.. மூலிகைத்தோட்டம் மூலம் பிரபலம்.. யார் இந்த சுபஸ்ரீ?
அப்போது எதிர்பாராத விதமாக மது போதையில் இருந்த அவர் நிலை தடுமாறி மழை நீர் வடிகால் பள்ளத்தில் விழுந்துள்ளார். பள்ளம் முழுவதும் கழிவுநீர் தேங்கியுள்ளதால் அருகில் இருந்தவர்கள் மீட்க முற்பட்டும் போதையில் இருந்ததால் துர்நாற்றம் மூச்சு விட முடியாமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எம்ஜிஆர் நகர் போலீசார் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து அப்பகுதிவாசிகள் தெரிவிக்கையில் அடிக்கடி இந்த நெடுஞ்சாலை பகுதியில் இந்த பள்ளத்தினால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் பாதுகாப்பு ஏதும் இல்லாமல் இருந்த நிலையில் பள்ளத்தில் விழுந்த பின்பு துணிகளை கட்டி தடுப்பு வழிகள் அமைப்பதாகவும் குற்றச்சாட்டை எழுப்பி உள்ளனர். பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுவதால் இது போன்ற விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுவதாகவும் துரித முறையில் பணிகள் மேற்கொண்டு இருந்தால் இந்த உயிர் எழுப்பு நடைபெற்று இருக்காது எனவும் கூறுகின்றனர்.
சென்னை, அசோக் நகரில் சாலையோரம் உரிய வழிமுறைகளை பின்பற்றாமல், முறையாக தடுப்புகள் வைக்கப்படாத நிலையில் இருந்த, மழைநீர் கால்வாயில், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த
திரு.ஐயப்பன் என்பவர் தவறிவிழுந்து மரணமடைந்துள்ளார்,
அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்.குண்டும் குழியுமான சாலைகள்,… pic.twitter.com/hOUPpfOZeP
— Edappadi K Palaniswami – Say No To Drugs & DMK (@EPSTamilNadu) September 30, 2024
இந்த சமப்வம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் வலைத்தள பகுதியில், “ சென்னை, அசோக் நகரில் சாலையோரம் உரிய வழிமுறைகளை பின்பற்றாமல், முறையாக தடுப்புகள் வைக்கப்படாத நிலையில் இருந்த, மழைநீர் கால்வாயில், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ஐயப்பன் என்பவர் தவறிவிழுந்து மரணமடைந்துள்ளார், அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்.
குண்டும் குழியுமான சாலைகள், நிரம்பி வழியும் கழிவு நீர் குழாய்கள், குடிநீர் குழாய்களில் கலக்கும் கழிவு நீர், நேற்று முன்தினம் பெய்த 10 செ.மீ. மழைக்கே பல் இளிக்கும் மழைநீர் வடிகால் அமைப்பு, வெள்ள நீரால் நிரம்பி வழிந்த சாலைகள், மழை நீரால் கொசு உற்பத்தி கேந்திரமாக மாறியுள்ள பல மாநகராட்சி பூங்காக்கள் என அவல நிலையில் வைத்திருக்கும் திரு. ஸ்டாலினின் திமுக அரசின் சென்னை மாநகராட்சியின் நிர்வாகச் சீர்கேடே இத்துயரச் சம்பவத்திற்கு காரணம்.
மேலும் படிக்க: ” அரசியலில் இருந்து கடவுளை ஒதுக்கி வைக்க வேண்டும்” – திருப்பதி லட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கருத்து..
இம்மரணத்திற்கு தமிழக மக்கள் மீது சிறிதும் அக்கறையில்லாத, குடும்ப நலனையே பிரதானமாக கொண்ட முதலமைச்சர் தான் முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும். இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் அரசு நிவாரணம் வழங்கவும், தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், இனி இதுபோன்ற நிகழ்வு எங்கும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும் விடியா திமுக முதல்வரை வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.