அப்படி போடு..! சென்னை பீச் முதல் காட்பாடி வரை வந்தே பாரத் மெட்ரோ ரயில் இயக்கம்..
12 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் ஏசி வசதி, பயணிகளை கவரும் வகையில் உள் அலங்காரம், சொகுசு இருக்கைகள் போன்ற அடிப்படை வசதிகள் இடம்பெற்றுள்ளன. கண்காணிப்புக் கேமிரா, அதிநவீன கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 104 பேர் அமர்ந்து செல்லலாம். 200 பேர் நிற்க முடியும்.
வந்தே பாரத் மெட்ரோ ரயில்: சென்னை பெரம்பூர் ஐசிஎஃப் ஆலையில் வந்தே பாரத் ரயில், அம்ரித் பாரத் ரயில் (சாதாரண வந்தே பாரத் ரயில்), வந்தே மெட்ரோ ரயில் ஆகிய ரயில்கள் தயாரிக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இவற்றில் ஒன்றாக, முதல் வந்தே பாரத் மெட்ரோ ரயில் தயாரிப்பு பணி கடந்த மாதம் முடிந்தது. 12 பெட்டிகளை கொண்ட இந்த ரயிலில் ஏசி வசதி, பயணிகளை கவரும் வகையில் உள் அலங்காரம், சொகுசு இருக்கைகள் போன்ற அடிப்படை வசதிகள் இடம்பெற்றுள்ளன. கண்காணிப்புக் கேமிரா, அதிநவீன கழிப்பறைகள், தானியங்கி கதவுகள் உள்ளிட்ட வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பெட்டியிலும் 104 பேர் அமர்ந்து செல்லலாம். 200 பேர் நிற்க முடியும். அதிக பயணிகளை ஏற்றிச்செல்லும் வகையில், உள்வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
The Vande Metro trial run has successfully begun. The train pulled out of the ICF yard and started its journey towards Chennai Beach from Villivakkam station at 8:23 AM today.@UpdatesChennai @TamilNaduInfra @AshwiniVaishnaw#vandemetro #IndianRailways pic.twitter.com/tLJMu3fzre
— Pranav sriKrishna (@pranavsk27) August 3, 2024
கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுக செய்யப்பட்ட வந்தே பாரத் ரயிலுக்கு பயணிகள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் தற்போது பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட 60 வந்தே பாரத் ரயில்கள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. அந்த வகையில் தற்போது சோதனை ஓட்டம் அடிப்படையில் இன்று சென்னை – காட்பாடி இடையே வந்தே பாரத் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது.
சென்னை – காட்பாடி இடையே இந்த ரயில் வில்லிவாக்கத்தில் இருந்து இன்று காலை 8.15 மணிக்கு புறப்பட்டு, காலை 9.00 மணிக்கு சென்னை கடற்கரையை அடைந்தது. தொடர்ந்து, அங்கிருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, வில்லிவாக்கத்தை காலை 10 மணிக்கு அடைந்தது. வில்லிவாக்கத்தில் இருந்து காலை 10.15 மணிக்கு அந்த ரயில் புறப்பட்டது. இந்த ரயில் அரக்கோணம் வழியாக காட்பாடியை 11.55 மணிக்கு அடைந்து காட்பாடியில் இருந்து பகல் 12.15 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடைந்தது.
Also Read: ரூ. 30 கோடியில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்கா.. புதிய அம்சங்களுடன் சூப்பர் ஸ்பாட்..
ரயில்வே வாரியத்தின் உத்தரவின் பேரில், சென்னையில் முதல் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. வந்தே மெட்ரோ ரயலின் வேகம், சிக்னல் தொழில்நுட்பம், ரயில் நிலையங்களில் நடைமேடைகளில் சரியாக நிற்கிறதா உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். மேலும் இந்த ரயிலை எந்த வழித்தடத்தில் இயக்குவது என்பது குறித்து இன்னும் இறுதி செய்யப்படவில்லை.