5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Train Cancelled: பயணிகளே உஷார்.. சென்னையில் நாளை மின்சார ரயில்கள் ரத்து.. முக்கிய ரூட் மக்களே!

மின்சார ரயில்கள் ரத்து: பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் நாளை (செப்டம்பர் 15 ஞாயிற்றுகிழமை) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதன் காரணமாக இந்த நேரத்தில் கடற்கரை - தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது.

Chennai Train Cancelled: பயணிகளே உஷார்.. சென்னையில் நாளை மின்சார ரயில்கள் ரத்து.. முக்கிய ரூட் மக்களே!
சென்னை மின்சார ரயில்
umabarkavi-k
Umabarkavi K | Published: 14 Sep 2024 16:32 PM

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் நாளை (செப்டம்பர் 15 ஞாயிற்றுகிழமை) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் ரயில் போக்குவரத்து என்பது இன்றியமையாத ஒன்று . குறிப்பாக சென்னை புறநகர் மற்றும் உள்பகுதிகளை இணைக்க கூடிய போக்குவரத்து சேவையான மின்சார ரயியில்கள் இருப்பதால் நாள்தோறும் ஆயிக்கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.  பள்ளி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை அனைவரும் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு, சென்னை கடற்கரை – வேளச்சேரி, சென்னை கடற்கரை – திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை – பட்டாபிராம் ஆகிய வழித்தடங்களில் தற்போது மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதில் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடங்களில் மட்டும் ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர். மின்சார ரயில் சேவை ஒருநாள் இல்லாவிட்டாலும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மின்சார ரயில்களை முறையாக ரயில்வே நிர்வாகம் பராமரித்து வருகிறது.  இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக  அவ்வப்போது மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதும், பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவது அடிக்கடி நடைபெறுகிறது.

Also Read: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.. உங்க லீவ இப்படி பிளான் பண்ணுங்க!

மின்சார ரயில்கள் ரத்து:

இந்த நிலையில்,  பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் நாளை (செப்டம்பர் 15 ஞாயிற்றுகிழமை) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதன் காரணமாக இந்த நேரத்தில் கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது.

இருப்பினும், பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரத்துக்கு காலை 8.35, 9.38, 10.10, 10.40, 11.20, மதியம் 12.00, 1.05, 1.30, 2.30, 3.10, 3.45, மாலை 4.10, 4.30, 4.50, 5.10, 5.50 மணிக்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கமாக பல்லாவரத்தில் இருந்து தாம்பரத்திற்கு காலை 9.35, 10.35, 11.05, 11.35, பகல் 12.10, 12.55, 1.55, 3.20, மாலை 4.40, 5.05, 5.20, 5.40, 6.40 மணிக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை கடற்கரையில் இருந்து காஞ்சிபுரம், அரக்கோணம், திருமால்பூர் செல்லும் மின்சார ரயில் வழக்கம் போல் இயங்கும் என்று  ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் பேருந்துகள் இயக்கம் :

வார இறுதிநாளான நாளை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதையொட்டி சென்னை மாநகர போக்குவரத்துத்துறை சார்பில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  பயணிகளின்  சிரமமின்றி பயணிப்பதற்கு கூடுதல் பேருந்து இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”தாம்பரம் ரயில் நிலையத்தில் நாளை (15.09.2024) காலை 09.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9.00 மணி முதல் மாலை 07.00 மணி வரை சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரம் செல்லும் இரயில்கள் பல்லாவரம் இரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Also Read: மண்டையை பொளக்கும் வெயில்.. 2 நாட்களுக்கு அதிகரித்து காணப்படும் வெப்பநிலை..

எனவே, நாளை அவ்வழித்தடத்தில் பயணம் செய்யும் பயணிகள் நலன் கருதி மா.போ.கழகம் தற்போது இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக தாம்பரத்திலிருந்து பல்லாவரம் பேருந்து நிலையத்திற்கு 10 பேருந்துகள், தி.நகர் பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் மற்றும் பிராட்வே பேருந்து நிலையத்திற்கு 20 பேருந்துகள் என மொத்தம் 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மேலும் பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து இப்பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Latest News