5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Train Accident: மதுரையில் ரயில் தடம் புரண்டு விபத்து.. பயணிகளுக்கு என்னாச்சு?

சென்னையில் இருந்து போடி சென்ற ரயில், மதுரை ரயில் நிலையத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதாவது, சென்னையில் இருந்து சென்றுக் கொண்டிருக்கும் போது, தண்டவாளத்தில் இருந்து ரயிலின் சக்கரம் கீழே இறங்கியுள்ளது. எஞ்சினுக்கு அடுத்த உள்ள பெட்டியில் சக்கரம் கீழே இறங்கி விபத்து ஏற்பட்டிருக்கிறது.

Train Accident: மதுரையில் ரயில் தடம் புரண்டு விபத்து.. பயணிகளுக்கு என்னாச்சு?
ரயில் விபத்து
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 12 Nov 2024 15:38 PM

சென்னையில் இருந்து போடி சென்ற ரயில், மதுரை ரயில் நிலையத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதாவது, சென்னையில் இருந்து சென்றுக் கொண்டிருக்கும் போது, தண்டவாளத்தில் இருந்து ரயிலின் சக்கரம் கீழே இறங்கியுள்ளது. எஞ்சினுக்கு அடுத்த உள்ள பெட்டியில் சக்கரம் கீழே இறங்கி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இதனால் தடம் புரண்ட ரயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் ரயில்வே துறையினர் தீவிரம் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  மேலும், பயணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. தீபாவளி நாள் என்பதால் ரயிலில் பயணிகள் குறைவாக இருந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மதுரையில் ரயில் தடம் புரண்டு விபத்து

அண்மைகாலத்தில் ரயில் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில்  மைசூரில் இருந்து சென்னை வழியாக பீகார் மாநிலம் செல்லும் தர்பாங்கா விரைவு ரயில் கவரைப்பேட்டை ரெயில் நிலையில், முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.  ஆந்திரா செல்லும் மார்க்கத்தில் பிரதான தண்டவாளத்தில் வருவதற்கு சிக்னல் கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், பிரதான தண்டவாளத்தை தவிர்த்து அருகில் இருக்கக் கூடிய லூப்லைன் எனும் தண்டவாளத்தில் மணிக்கு 75 கிமீ வேகத்தில் விரைவு ரயில் வந்து முன்னால் நின்று கொண்டிருந்த சரக்கு ரயில்  பின் மோதியதால் இந்த விபத்து நடந்தது.

ஆனால், அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்து நடந்து 20 நாட்களுக்குள் அடுத்த விபத்து அரங்கேறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : மழை அலர்ட்… இன்று பட்டாசு வெடிக்க முடியுமா? வானிலை மையம் கொடுத்த தகவல்!

பயணிகளின் நிலை என்ன?

அதாவது, சென்னையில் இருந்து போடி சென்ற ரயில், மதுரை ரயில் நிலையத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. தண்டவாளத்தில் இருந்து ரயிலின் சக்கரம் கீழே இறங்கியு ரயில் இயக்கம் பாதிக்கப்பட்டது. ஆனால் பயணிகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.  தடம் புரண்ட ரயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் ரயில்வே துறையினர் ஈடுபட்ட நிலையில், தற்போது ரயில் இயக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் பல நன்மைகள் நடக்கின்ற போதிலும் சில தீமைகளும் நடக்கவே செய்கின்றன. குறிப்பாக இந்தியாவில் தொழில்நுட்ப வசதிகள் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக இந்திய ரயில்வே மேம்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

விரைவு ரயில், வந்தே பாரத் என பல ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. புல்லட் ரயிலை கொண்டு வர தீவிரமாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அதே சமயத்தில் ரயில் விபத்துகளும் கடந்த சில காலமாகவே அதிகரித்த வண்ணம் உள்ளன.

தொடரும் ரயில் விபத்துகள்

ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்கம் என ரயில் விபத்துகள் தொடர் கதையாகி வருகின்றன.  கடந்த ஆண்டு ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து ஒட்டுமொத்த உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சுமார் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இதற்கு காரணங்கள் பல இருந்தாலும் பாதிக்கப்படுவது பயணிகள் தான். அதன்படி கடந்த ஓராண்டில் மட்டும்  நடந்துள்ள மொத்த 40 ரயில் விபத்துகளில் 313 பயணிகள் மற்றும் நான்கு ரயில்வே ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர் என்று ரயில்வே அமைச்சர் கூறியுள்ளார்.

Also Read : கோயில் குளத்தில் கண்டெடுக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சர்.. திருச்சியில் பரபரப்பு!

கடந்த பத்து ஆண்டுகளில் பதிவான இறப்புகளின் எண்ணிக்கையில் கடந்த ஓராண்டில் மட்டும் அதிக விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன.  கடந்த 10 ஆண்டுகளில் 638 ரயில் விபத்துகள் நடந்துள்ள நிலையில், மொத்தம் 719 பயணிகள் இறந்துள்ளனர்.

அதோடு 29 பயணியாளர்களும் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.  ரயில் விபத்துகள் தொடர்ந்து நடந்து வருவதல் அதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து  மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Latest News