5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

நிமோனியா பாதிப்பிலும் சாதித்த மாணவர்… 10ஆம் வகுப்பு தேர்வில் 95% மதிப்பெண் பெற்று அசத்தல்!

14 ஆண்டுகளாக ட்ரக்யாஸ்டமி குழாய் பொருத்தப்பட்டு பள்ளிக்கு சென்ற வந்த ரிஷிகேஷ், தற்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 475 மதிப்பெண்களை பெற்றுள்ளார். தமிழில் 94, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 99, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 83 என மொத்தம் 475 மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்.

நிமோனியா பாதிப்பிலும் சாதித்த மாணவர்… 10ஆம் வகுப்பு தேர்வில் 95% மதிப்பெண் பெற்று அசத்தல்!
சாதித்த மாணவன் (புகைப்படம் நன்றி : தி இந்து )
umabarkavi-k
Umabarkavi K | Published: 16 May 2024 19:36 PM

நிமோனியா பாதிப்பு: சென்னை கே.கே.நகரைச் சேர்ந்தவர் சிவகாமி. இவரது மகன் 16 வயதான ரிஷிகேஷ். இவர் இரண்டு வயதாக இருக்கும்போதே நிமோனியாவால் பாதிக்கப்பட்டார். இதனால் அவருகு சுவாசிப்பதற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டது. மேலும், சுவாப் பாதையும், உணவுப் பாதையும் இயல்பைக் காட்டிலும் சுருங்கிவிட்டது. இதன் காரணமாக 2010ஆம் ஆண்டு முதல் ரிஷிகேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் ரிஷிகேஷ் 2010ல் இருந்து சிகிச்சை அளித்து வருகிறார். சிகிச்சைக்காக செலவையும், மருந்துகளையும் இலவசமாக ரிஷிகேஷுக்கு வழங்கி வருகிறார்.

10ஆம் வகுப்பு தேர்வில் சாதித்த மாணவர்:

பல அறுவை சிகிச்சை செய்து ட்ரக்யாஸ்டமி குழாய் பொருத்தப்பட்டது. இதனுடன் தான் 14 ஆண்டுகளாக பள்ளிக்கு சென்று வந்தார். இந்த நிலையில், தற்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 475 மதிப்பெண்களை ரிஷிகேஷ் பெற்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். தமிழில் 94, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 99, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 83 என மொத்தம் 475 மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்.

இதுகுறித்து மாணவிரின் தாய சிவகாமி கூறுகையில், “பள்ளிக்கு சென்ற ஒவ்வொரு நாளும் ட்ரக்யாஸ்டமி குழாய் பொருத்தப்பட்டது காரணமாக சிரமங்களை எதிர்கொண்டார். அப்போது எல்லாம் நான் பள்ளிக்கு வந்து அவரை அழைத்து செல்வேன். டாக்டர் மோகன் காமேஸ்வரன் மற்றும் அவரது குழுவும் தான் எனது மகனுக்கு மறுவாழ்வு அளித்தனர். பல அறுவை சிகிச்சையும் இலவசமாக வழங்கினார். ரிஷிகேஷ்க்கு பல்வேறு வகையில் உத்வேகம் அளித்தார். பள்ளியிலும் ஆசிரியர்கள் துணையாக இருந்தனர்” என்றார்.

பள்ளி முதல்வர் கூறுகையில், ” ரிஷிகேஷ் நல்ல பையன். எல்.கே.ஜி முதல் அவர் எங்களுடன் இருந்ததால், அவரது பெற்றோருடன் நல்ல உறவை வளர்த்துக் கொண்டோம். அவர் பெற்றோர் ஒரு கடின உழைப்பாளி. ரிஷிகேஷ்க்கு 11 வயது வரை, அவரது தாய் சிவகாமி தினமும் பள்ளிக்குச் வந்து மதிய உணவு அளிப்பார். நிமோனியாவால பாதிக்கப்பட்ட ரிஷிகேஷ் 8 ஆம் வகுப்பில் இருந்து தானாக சாப்பிட தொடங்கினார்.

இப்போது தானாக தான் சாப்பிடுகிறான். இதற்கு டாக்டர் மோகனின் சிகிச்சையை தான் காரணம்” என்றார். தற்போது ரிஷிகேஷ் 11ஆம் வகுப்பில் குரூப் 1 பிரிவு எடுத்திருக்கிறார். அவர் பொறியியலாளராக வருவதாக ரிஷிகேஷ் விரும்புவதாக தாய் சிவகாமி கூறினார்.  இவரது தந்தை மூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read :  தீர்த்தத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பாலியல் பலாத்காரம்… பூசாரி மீது பெண் தொகுப்பாளர் குற்றச்சாட்டு!

Latest News