கோவை வந்தே பாரத் ரயிலில் திக்திக்.. திடீரென வந்த புகை.. பதறிய பயணிகள்!
Vande Bharat Rail : கோவை - சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீரென புகை வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரயிலின் ஒரு பெட்டியில் உள்ள ஏசியில் திடீரென புகை வந்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். இதனை அறிந்த ரயில்வே அதிகாரிகள் உடனே தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கோவை – சென்னை வந்தே பாரத் ரயிலில் திடீரென புகை வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரயிலின் ஒரு பெட்டியில் உள்ள ஏசியில் திடீரென புகை வந்ததால் பயணிகள் அச்சம் அடைந்தனர். இதனை அறிந்த ரயில்வே அதிகாரிகள் உடனே தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் ரயில்வே துறையை நவீனப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக பல்வேறு புதிய ரயில்களை உற்பத்தி செய்து வருகிறது. மேலும், பல்வேறு ரயில்களை நவீனப்படுத்தியும் வருகிறது.
கோவை வந்தே பாரத் ரயிலில் திடீரென வந்த புகை
அதில் ஒன்று தான் வந்தே பாரத் ரயில். வந்தே பாரத் ரயில் நாட்டில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் கட்டணம் அதிகமாக இருந்தாலும், விரைவாக பயணம் செய்ய முடியும் என்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வந்தே பாரத் ரயில் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக தமிழ்நாட்டில் ஐந்துக்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. அதாவது, சென்னை – நெல்லை, பெங்களூரு – சென்னை, சென்னை – கோவை, நெல்லை – சென்னை, சென்னை – விஜயவாடா, கோவை – பெங்களூரு உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, இதில் கோவை – சென்னை இடையிலான ரயில் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இதில் நாள்தோறும் எண்ணற்ற பயணிகள் பயணித்து வருகின்றனர். இந்த ரயில் புதன்கிழமையை தவிர்த்த மற்ற 6 நாட்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. காலை 6 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் ரயில் மதியம் 11.50 மணிக்கு சென்னை சென்றடைகிறது.
Also Read : கனமழை, வெள்ளம்.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
பதறிய பயணிகள்
மறுமார்க்கத்தில் சென்னையில் இருந்து 2.15 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 8.15 மணிக்கு கோவைக்கு சென்றடைகிறது. இந்த ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இந்த நிலையில், நேற்று கோவை – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயிலில் திடீரென புகை வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அதாவது நேற்று இரவு 2.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்ட ரயில், காட்பாடி அருகே சென்றுக் கொண்டிருக்கும்போது திடீரென ரயிலில் புகை வந்துள்ளது. ரயிலின் ஒரு பெட்டியில் உள்ள ஏசியில் இருந்து புகை வந்துள்ளது.
சி1 பெட்டியில் இந்த விபத்து நடந்துள்ளது. அங்கிருந்த ஏசி பெட்டியில் தீப்பிடித்திருந்தது. தீப்பிடித்தால் அந்த பெட்டி முழுவதும் புகை பரவியது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர். உடனே 139 என்ற உதவி எண்ணிற்கு பயணிகள் அழைத்தனர். உடனே ரயில்வே அதிகாரிகள் புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
மேலும், ஏசிக்குள் புகை சூழ்ந்துள்ளது. இதனால் பதறிய பயணிகள் ரயில் பெட்டிகளின் கதவை திறந்து விட வேண்டும் என்று கூறீனார். ஆனால், டிக்கெட் பரிசோதகர் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. பின்னர், பயணிகளிடம் பேசிய ரயில்வே அதிகாரிகள், மின் கசிவு காரணமாக சிறிய புகை ஏற்பட்டிருக்கிறது.
Also Read : தொடர்ந்து மக்களை கைவிடும் அரசு!.. ஃபெஞ்சல் பாதிப்பு குறித்து விஜய் அறிக்கை!
ஆனால் தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை. இதனால் பயணத்தை துவங்கதில் எந்த பிரச்னையும் இல்லை என்று கூறினர். பின்பு கோவை – சென்னை வந்தே பாரத் ரயில் சேலம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது ஆய்வு செய்யப்பட்டது. பின்னர், சிறிது நேரம் கழித்து அங்கிருந்து ரயில் புறப்பட்டது. இருப்பினும், ஈரோடு வரை புகையின் தாக்கம் இருந்ததாக பயணிகள் கூறினர். மேலும், நேரத்தை கடைபிடிப்பதை விட பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.