Chennai : மும்பை விபத்து எதிரொலி.. சென்னையில் பெரிய பேனர்களுக்கு நடவடிக்கை எடுக்கும் மாநகராட்சி.! - Tamil News | | TV9 Tamil

Chennai : மும்பை விபத்து எதிரொலி.. சென்னையில் பெரிய பேனர்களுக்கு நடவடிக்கை எடுக்கும் மாநகராட்சி.!

Updated On: 

17 May 2024 15:56 PM

மும்பையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர் விழுந்து 16 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் எதிரொலியாக சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட அனைத்து பேனர்களையும் அகற்ற மாநகராட்சி அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் பொதுமக்களும் மிகப்பெரிய அளவில் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chennai : மும்பை விபத்து எதிரொலி.. சென்னையில் பெரிய பேனர்களுக்கு நடவடிக்கை எடுக்கும் மாநகராட்சி.!

பேனர்

Follow Us On

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக 2,000க்கும் மேற்பட்ட மிகப்பெரிய விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. சென்னை நகர எல்லைகள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனடியாக அகற்றுமாறு மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மும்பையில் சட்டவிரோதமாக வைக்கப்பட்ட பேனர் புழுதி புயல் காரணமாக இடிந்து விழுந்து 16 பேர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

சென்னையின் முக்கிய சாலையோரம், கல்வி நிறுவனங்கள், பெட்ரோல் பங்க், உயர்மட்ட பாலங்கள், நான்கு வழிச்சாலைகள் என அனைத்து விதமான மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்களை உடனே அகற்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Also Read:Covai: ஆம்புலன்ஸ் முதல் நாய் வரை.. யானையை விரட்ட கோவை விவசாயிகள் செய்யும் புது விஷயம்!

சென்னையில் இதுவரை விளம்பர பலகை அமைப்பதற்கு அனுமதி கேட்டு இதுவரை மாநகராட்சிக்கு 1,100 விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும், மேலும் கடந்த 2 நாட்களில் அனுமதியின்றியும், அளவீடுகளை தாண்டியும் வைக்கப்பட்ட 460 விளம்பர பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் , 40 க்கும் மேற்பட்ட விளம்பர பலகைகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 14ஆம் தேதி மும்பையில் திடீரென ஏற்பட்ட புழுதி புயல் காரணமாக மிகப்பெரிய அளவிலான பேனர் ஒன்று விழுந்ததில் 16 பேர் உயிரிழந்ததாகவும் 70-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த விளம்பர பேனர் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தின் அடிப்படையில் சென்னையில் உள்ள அனைத்து பேனர்களையும் அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அரசியல் கட்சி சார்ந்த விளம்பர பேனர் இடிந்து விழுந்து ஐடி துறையில் வேலை பார்த்து வந்த சுபஸ்ரீ என்ற பெண் பரிதாபமாக உயிர்ந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு தமிழகத்தில் பேனர் வைக்கும் கலாச்சாரத்திற்கு தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. ஆனாலும், பல்வேறு இடங்களில் தொடர்ந்து அரசின் விதிமுறைகளை மீறி, பெரிய அளவிலான பேனர்கள் பொதுமக்கள் கூடும் இடங்களில் வைக்கப்பட்டு வருகின்றனர். இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

உடலுக்கு அற்புத பலன்களை தரும் வெண்டைக்காய்..!
யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
Exit mobile version