5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

VASECTOMY Camp: ஆண்களுக்கான நவீன கருத்தடை முகாம்.. எத்தனை நாட்களுக்கு? சிகிச்சை முறை என்ன?

இன்றைய நவீன சிகிச்சை முறையில் ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை மிகவும் எளிமையாகவும் பாதுகாப்பாகவும் செய்யப்படுகிறது. இதனால் எந்த பக்க விளைவுகள் வருவதில்லை. மேலும்,  பல ஆண்கள் பெண்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு கருத்தடை சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் ஒரு சிலரிடம் அந்த தயக்கம் மாறாமல் உள்ளது.

VASECTOMY Camp: ஆண்களுக்கான நவீன கருத்தடை முகாம்.. எத்தனை நாட்களுக்கு? சிகிச்சை முறை என்ன?
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 19 Nov 2024 16:58 PM

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிறப்பு முகாம்கள் 28.112024 முதல் 04.12.2024 வரை நகர்ப்புர சமுதாய நல மையங்களில் நடைபெற உள்ளது என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில், “ பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிறப்பு முகாம்கள் (NO SCALPEL VASECTOMY) 28.11.2024 முதல் 04.122024 வரை 15 மருத்துவ மண்டலங்களில் உள்ள நகர்ப்புர சமுதாய நல மையங்களில் காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறவுள்ளது. தேசிய குடும்ப நலத்திட்டத்தில் ஆண்களின் பங்கு அரிதாக இருக்கிறது. மனைவியின் நலத்தைக் காக்க ஆண்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதனால், இந்தக் கருத்தடை சிறப்பு முகாமில் ஆண்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆண்களுக்கான நவீன கருத்தடை சிகிச்சை முகாம்:

ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சை முகாம்களில், கத்தி உபயோகப்படுத்தாமலும் தையல் தழும்பு இல்லாமல் புதிய எளிய முறையில் செய்யப்படுவதால் மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியமின்றி, சிகிச்சை முடிந்த ஒரு மணி நேரத்தில் வீட்டிற்கு செல்லலாம் என்பதால், இந்த எளிமையான கருத்தடை சிகிச்சை முறையில் தகுதி வாய்ந்த ஆண்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், நவீன கருத்தடை செய்து கொள்ளும் நபர்களுக்கு அரசு வழங்கும் ஊக்கத்தொகை ரூ1100/- ஊக்குவித்து அழைத்து வரும் நபருக்கு ரூ.200-ம் வழங்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: ஷாக் கொடுக்குமா வெங்காயம் விலை.. அதிகரிக்க என்ன காரணம்? ஆனியன் வரலாறு!

கருத்தடை சிகிச்சை:

முன் இருந்த காலத்தில் கருத்தடை சிகிச்சை பற்றிய போதிய விழுப்புணர்வு இல்லாமல் இருந்தது. இதனால் ஒரு பெண் அதிகபட்சமாக 10 குழந்தைகள் வரை பெற்றெடுக்கும் நிலை இருந்தது. இதனால் அந்த பெண்ணின் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. காலங்கள் மாற, பொருளாதார வளர்ச்சியின் காரணமாகவும் இது படிப்படியாக குறைந்தது.

இதற்கு முந்தைய தலைமுறை 3 முதல் 4 குழந்தைகள் வரை பெற்றெடுத்தனர். அதனை தொடர்ந்து அந்த பெண்ணிற்கு கருத்தடை சிகிச்சை செய்யப்படும். குழந்தைகள் பெற்றெடுப்பதோடு மட்டுமல்லாமல் கருத்தடை என்றாலும் அது ஒரு பெண்ணின் தலையில் தான் தினிக்கப்பட்டது. ஆண்களுக்கு கருத்தடை சிகிச்சைஎ செய்யப்பட்டால் அது உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் நிறைந்து இருந்தது.

மேலும் படிக்க: சிதம்பரம் கோயில் கொடிமர விவகாரம்.. அரசுக்கு அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்..

இன்றளவும் இந்த நம்பிக்கை உள்ளது. தறபோதைய சூழலில் நாம் இருவர் நமக்கு இருவர் என்பது போக நாம் இருவர் நமக்கு ஒருவர் என்ற கொள்கை வந்து விட்டது. ஆனால் இன்று மக்களிடம் போதிய விழிப்புணர்வு உள்ளது. அதாவது பெண்கள் மட்டுமே மேற்கொண்ட கருத்தடை சிகிச்சை இன்று ஆண்களும் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் சதவீதம் என்பது மிகவும் குறைவு.

இன்றைய நவீன சிகிச்சை முறையில் ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை மிகவும் எளிமையாகவும் பாதுகாப்பாகவும் செய்யப்படுகிறது. இதனால் எந்த பக்க விளைவுகள் வருவதில்லை. மேலும்,  பல ஆண்கள் பெண்களின் உடல் நலத்தை கருத்தில் கொண்டு கருத்தடை சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் ஒரு சிலரிடம் அந்த தயக்கம் மாறாமல் உள்ளது. மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சென்னை மாநகராட்சி தரப்பில் ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிறப்பு முகாம்கள் 28.112024 முதல் 04.12.2024 வரை நடத்தப்பட உள்ளது.

Latest News