5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

இது தெரியாமல் நாய் வளர்க்காதீங்க..கண்டிஷன் போட்ட சென்னை மாநகராட்சி

செல்ல நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் உரிமங்கள் சரிபார்க்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இது தெரியாமல் நாய் வளர்க்காதீங்க..கண்டிஷன் போட்ட சென்னை மாநகராட்சி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 07 May 2024 14:21 PM

சென்னையில் சிறுமியை வளர்ப்பு நாய்கள் கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாய் கடித்ததில் சிறுமி படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், சென்னை மாநகராட்சி நாய் வளர்ப்பதற்கான சில வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டிருக்கிறது. அதன்படி,

சென்னை மாநகராட்சி எச்சரிக்கை:

  • வெறித்தனமான நாய்களை வளர்க்கும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
  • மாநகராட்சி பூங்காக்களில் பாதுகாப்புகள் கடுமையாக்கப்படும். ஒவ்வொரு செல்லப்பிராணி உரிமையாளரும் ஒரு பூங்காவிற்குள் ஒரு நாயை மட்டுமே அழைத்துச் செல்வது கட்டுப்படுத்தப்படும்.
  • ஒவ்வொரு செல்லப்பிராணி உரிமையாளரும் ஒரு பூங்காவிற்குள் ஒரு நாயை மட்டுமே அழைத்துச் செல்வது கட்டுப்படுத்தப்படும்.
  • பூங்காவிற்குள் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு செல்லப் பிராணிகள் கயிறுகள் மூலம் கட்டப்பட்டு அதன் வாய்ப்பகுதியானது மூடப்பட்டிருக்க வேண்டும்
  • நாய்களுக்கு தடுப்பூசி போட அறிவுறுத்தப்படும். மேலும், செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெறுவது கட்டாயம் பெற வேண்டும்
  • தெருநாய்கள் அல்லது கட்டவிழ்த்து விடப்பட்ட நாய்கள் பூங்காவிற்குள் நுழைவது தடுக்கப்படுவதோடு, பூங்காவில் விளையாடும் பகுதியில் நாய்கள் நுழைவது தடைசெய்யப்படும்
  • இது தவிர துணை மற்றும் செல்ல நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகளின் உரிமங்கள் சரிபார்க்கப்படும்.
  • பழக்கமான மனிதர்கள் மற்றும் பழக்கப்பட்ட சுற்றுப்புறத்திலும் விலங்குகளின் நடத்தை வேறுபட்டிருக்கும் என்றும், மேலும், வெளியில் புதிய சூழலில் வரும் போது குழந்தைகள் மற்றும் வயதானவர்களை காணும்போது விலங்குகளுக்கு பயம் மற்றும் பதட்ட உணர்வு ஏற்படும்.
  • இதனால் விலங்குகளின் நடத்தை முற்றிலும் வேறுபட்டிருக்கும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கு விலங்குளின் உரிமையாளர்கள்
    தங்களின் பொறுப்பை உணர்ந்து மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காமல் வெளியில் வரும் போது கவனத்துடன் விலங்குகளை கையாள வேண்டும்.
  • விலங்குகளை வளர்ப்பவர்கள் அதற்கு தேவையான உணவு, இருப்பிடம், தண்ணீர் போன்றவற்றை வழங்க வேண்டும்

Latest News