3D Art Bus stop: சென்னையில் 3டி பஸ் ஸ்டாப்.. 81 இடங்களில் பொருத்த திட்டம்.. இவ்வளவு வசதிகளா?
பேருந்து நிறுத்தங்களும் அவ்வப்பொது புது வடிவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. ஒரு சில இடங்களில் குளிர்சாதனம் பொருத்திய பேருந்து நிறுத்தம் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. பழுதான பேருந்து நிறுத்தங்களை புது தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புதுமைபடுத்தி வருகின்றனர். மக்கள் அமரும் வகையில் தாழ்வான இருக்கைகளுடன் நிழற்குடைகள் பொறுத்தப்பட்டு வருகிறது. காலநிலைக்கு ஏற்றவாறும் இது உள்ளது.
3டி ஆர்ட் பேருந்து நிறுத்தம்: சென்னையில் முதல் முறையாக 3 டி ஆர்ட் பயன்படுத்தி பேருந்து நிறுத்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. சென்னை போன்ற பெருநகரில் மக்கள் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு பயணிக்க பேருந்து, மெட்ரோ மற்றும் புறநகர் ரயிலை நம்பியுள்ளனர். ஆனால் இதில் பெரும்பாலான மக்கள் பேருந்து போக்குவரத்தையே பயன்படுத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசு தரப்பிலும் மக்களின் வசதிக்காக பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டு வருகிறது. குறிப்பாக முதியவர்கள் பேருந்தில் சிரமமின்றி ஏற தாழ்வான படிகள் கொண்ட அதிநவீன பேருந்துகள், மகளிருக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல விஷ்யங்கள் செய்து தரப்பட்டுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, பேருந்து நிறுத்தங்களும் அவ்வப்பொது புது வடிவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. ஒரு சில இடங்களில் குளிர்சாதனம் பொருத்திய பேருந்து நிறுத்தம் மக்களின் பயன்பாட்டில் உள்ளது. பழுதான பேருந்து நிறுத்தங்களை புது தொழில்நுட்பங்களை பயன்படுத்தி புதுமைபடுத்தி வருகின்றனர். மக்கள் அமரும் வகையில் தாழ்வான இருக்கைகளுடன் நிழற்குடைகள் பொறுத்தப்பட்டு வருகிறது. காலநிலைக்கு ஏற்றவாறும் இது உள்ளது.
For the first time ever, Chennai Corporation is setting up 3D Printed Bus stops at 81 locations. These will come with CCTVs, friendly seating & can be shifted easily too. They will soon be handed over to Pvt Players for maintenance… #Chennai #BusStop 🚌 pic.twitter.com/EjBC2dd0Nw
— Chennai Updates (@UpdatesChennai) September 10, 2024
அந்த வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் 1,420 பேருந்து நிறுத்தங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில், 700 பேருந்து நிறுத்தங்கள் ஒப்பந்தக்காரர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. மீதமுள்ளவை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதில் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 720 நிறுத்தங்களில் 149 நிறுத்தங்கள் மிகவும் மோசமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் பட்டினம்பாக்கம் சந்திப்பு ,சாந்தோம், டி.ஜி.வைஷ்ணவ கல்லூரி உள்ளிட்ட 81 இடங்களில் 3டி வடிவ பேருந்து நிறுத்தங்களாக மாற்ற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
மேலும் படிக்க: ஆட்டோ ரைடை கேன்சல் செய்ததால் ஆத்திரம்.. கல்லூரி மாணவியின் கன்னத்தில் அறைந்த ஓலா டிரைவர்.. அதிர்ச்சி சம்பவம்!
அதாவது 3டி ஆர்ட் பயன்படுத்தி பேருந்து நிறுத்தங்கள் வடிவமைக்கப்பட உள்ளது. சாதரணமாக நாம் சின்ன சின்ன 3டி ஆர்ட் பொம்மைகளை பார்த்திருப்போம். ஆனால் அந்த 3டி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முழு நிழற்குடையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 3டி பேருந்து நிறுத்தத்தில் போஸ்டர் அல்லது ஸ்டிக்கர் ஒட்ட முடியாது. மேலும் ஒரே இரவில் இந்த பேருந்து நிறுத்தத்தை தயார் செய்து அதனை அசெம்பிள் செய்யலாம். இதில் மேன் பவரும் குறைவாக பயன்படுத்தப்படுகிறது. இதற்கான பராமரிப்பு செலவும் மிகவும் குறைவு தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண பேருந்து நிறுத்தத்தை ஒப்பிடுகையில் இதில் நீண்ட நாள் உழைக்கும் தன்மை கொண்டது.
இப்படி பல்வேறு அம்சங்களை கொண்ட 3டி ஆர்ட் பேருந்து நிழற்குடை சென்னையில் முதல்கட்டமாக சென்னை காமராஜர் சாலையில் நிறுவப்பட்டுள்ளது. அதாவது முதற்கட்டமாக சென்னை மெரினா கடற்கரை பேருந்து நிறுத்தத்தில் 3டி வடிவிலான நவீன நிழற்குடை அமைக்கும் பணி கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்ற நிலையில் நேற்று மாலை பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பணம் எடுக்க ஏடிஎம் கார்டு எடுத்து செல்லவில்லையா?.. கவலை வேண்டாம்.. அதான் UPI இருக்கே!
அடுத்தகட்டமாக 12 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையில் உள்ள 81 பேருந்து நிறுத்தங்கள் நவீனமயமாக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3D பேருந்து நிறுத்தங்களை விரைவாக நிறுவ முடிவதுடன், தேவைப்படும் போதும் வேறு இடத்திற்கு இதனை அப்படியே டிஸ்மாண்டில் செய்து மாற்ற முடியும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. சிசிடிவி மூலாக பேருந்து நிறுத்தத்தை கண்காணிப்பதுடன், ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும் வகையில் இந்த நிழற்குடையில் நவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அதிநவீன நிழற்குடை மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.