5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பணி சுணக்கமா? லிப்ஸ்டிக் பிரச்னையா? சென்னை மேயர் – டபேதார் சிக்கல் என்ன? முழு விவரம்!

ஆவடியைச் சேர்ந்தவர் மாதவி (50). கடந்த 2009-ம் ஆண்டு அலுவலக உதவியாளராக சென்னை மாநகராட்சியில் பணியில் சேர்ந்தார். மாநகராட்சி மேயராக ஆர்.பிரியா பொறுப்பேற்ற பிறகு, அவரது டபேதாராக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். மேயர் வரும்போது, முன்னாள் சென்று மேயர் வருகிறார் என சொல்ல வேண்டும் அது தான் தபேதார் பணி. இவர் கடந்த மாதம் திடீரென எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மணலி மண்டல அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

பணி சுணக்கமா? லிப்ஸ்டிக் பிரச்னையா? சென்னை மேயர் – டபேதார் சிக்கல் என்ன? முழு விவரம்!
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 26 Sep 2024 10:52 AM

சென்னை மேயர் பிரியாவின் டபேதாராக பணிபுரிந்து வந்த மாதவி கடந்த மாதம் மணலி மண்டல அலுவலகத்திற்கு மாற்றப்பட்டார். பணிக்கு சரியாக வராத காரணத்தினால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக அப்போது தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தற்போது இதற்கு வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அதாவது டபேதார் மாதவி சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுக்கு இணையாக உதட்டுச்சாயம் – லிப்ஸ்டிக் போட்டு வந்ததால் அவரை கண்டித்து பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்த மாதவி, “ மேயருக்கு இணையாக லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், இது பெண்ணுக்கு நடந்த அநீதி. மனித உரிமை மீறல்” என குற்ற்ம் சாட்டியுள்ளார்.

ஆவடியைச் சேர்ந்தவர் மாதவி (50). கடந்த 2009-ம் ஆண்டு அலுவலக உதவியாளராக சென்னை மாநகராட்சியில் பணியில் சேர்ந்தார். மாநகராட்சி மேயராக ஆர்.பிரியா பொறுப்பேற்ற பிறகு, அவரது டபேதாராக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். மேயர் வரும்போது, முன்னாள் சென்று மேயர் வருகிறார் என சொல்ல வேண்டும் அது தான் தபேதார் பணி. இவர் கடந்த மாதம் திடீரென எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் மணலி மண்டல அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கு மாநகராட்சி தரப்பில், “ அவர் அலுவலகத்திற்கு உரிய நேரத்திற்கு வருவதில்லை, உயர் அதிகாரிகளில் உத்தரவுகளை உதாசினப்படுத்துகிறார் என்றும், முறையாக முறைபணி செய்யவில்லை என குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டது. மேலும், மாதவியிடம் இது குறித்து பல முறை விளக்கம் கேட்டும் முறையான பதில் கிடைக்கவில்லை. எனவே தான் அவர் மணலி மண்டலத்திற்கு பணியிட மாற்ற செய்யப்பட்டுள்ளார்” என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் உண்மையான காரணம் இது இல்லை என மாதவி மறுத்துள்ளார். நான் என் பணியை சரியாக செய்திருக்கிறேன். ஆனாலும் எனக்கு வழங்கப்பட்ட பணி மாறுதல் பழிவாங்கும் நடவடிக்கையாகவே நான் பார்க்கிறேன் என தெரிவித்தார். பணிக்கு தாமதமாக வருவதால் பணி மாறுதல் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மேயரின் நேர்முக உதவியாளர் சிவசங்கரன் தன்னிடம் வந்து லிப்ஸ்டிக் போட வேண்டாம் என்றும், அப்படி போட்டால் வேறு நிறத்தில் போடும்படியும் கேட்டுக்கொண்டதாக மாதவி தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ”லிப்ஸ்டிக் போடுவது என்னுடைய தனிப்பட்ட உரிமை சிறுவயதிலிருந்து நான் போட்டு வருகிறேன். லிப்ஸ்டிக் போடக்கூடாது அல்லது வேறு கலரை மாற்றுங்கள் என தெரிவித்து இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்தது. அத்துடன் எனக்கு என்ன கலர் லிப்ஸ்டிக் பொருந்துமோ அதை தான் என்னால் பயன்படுத்த முடியும்” என மாதவி தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து மாதவிக்கு ஆகஸ்ட் 6 ஆம் தேதி நேர்முக உதவியாளர் சிவசங்கர் மெமோ கொடுத்துள்ளார். அதில், பணிக்கு தாமதமாக வருவதாகவும், உயர் அதிகாரிகளின் உத்தரவை உதாசினப்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மெமோவிற்கு விளக்கம் அளிக்கும் முன்னரே உடனடியாக அவருக்கு பணியிட மாற்றம் அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: திருச்சியில் பார்க்க வேண்டிய முக்கிய 8 அழகிய இடங்கள்…

இது தொடர்பாக பேட்டியளித்த மாதவி, “ சமீபத்தில் வந்து, நீங்கள் லிப்ஸ்டிக் எல்லாம் போடக்கூடாது என்று சொல்லி ஒரு வார்னிங் கொடுத்தார்கள். என்னை மட்டுமல்ல, என்னோடு சேர்ந்து சக ஊழியர்கள் இரண்டு பேருக்கு வார்னிங் கொடுத்தார்கள். அவர்களின் பெயரை சொல்ல விரும்பவில்லை. அப்போது ஒரு சக ஊழியரை பார்த்து, இவர்களை போல் நீங்கள் லிப்ஸ்டிக் போடுங்க. உங்களுடைய லிப்ஸ்டிக்கும், மேடமுடைய லிப்ஸ்டிக்கும் ஒரே மாதிரி இருக்கிறது. நீங்கள் அந்த மாதிரி போடக்கூடாது என்றார்கள்.

இது மனித உரிமை மீறல் ஆகும். லிப்ஸ்டிக் போடக்கூடாது என்று அரசாணையில் உள்ளதோ. அந்த அரசாணைக்கு நான் கட்டப்டுகிறேன் என்றேன். ஆனால், அதற்கு எதுவுமே பதில் வரவில்லை. அடுத்த சில நாளில் இரவு 7.30 மணிக்கு அலுவலகத்தில் இருந்தேன். எனக்கு மண்டல மாறுதல் பணியிட மாற்றம் வந்தது. மணலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டேன்.. கடைசியாக மேயர் பிரியா அவர்களை பார்த்தேன். அவர்கள் என்னை நன்றாக வேலை செய்யுங்கள் என்று வாழ்த்தி அனுப்பினார். நான் கடந்த ஒரு மாதமாக அங்குதான் வேலை செய்கிறேன். ஆனால் எனக்கு கொடுத்த மெமோ எப்படி மீடியாவிற்கு வந்தது என்று தெரியவில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி மேயருக்கு நிகராக லிப்ஸ்டிக் போட்டதால் டபேதார் பணியிட மாற்றம் செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதற்கு சென்னை மாநகராட்சி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News