5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து.. எந்த ரூட் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!

Chennai Train Cancelled: சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே வரும் 17ஆம் தேதி (ஞாயிற்றுகிழமை) மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து.. எந்த ரூட் தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!
மின்சார ரயில்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 15 Nov 2024 21:04 PM

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே வரும் 17ஆம் தேதி (ஞாயிற்றுகிழமை) மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் வரும் 17ஆம் தேதி மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதற்கு ஏற்றவாறு தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு ரயில்வே நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.  சென்னையில் ரயில் போக்குவரத்து மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

சென்னையில் மின்சார ரயில்கள் ரத்து

குறிப்பாக சென்னை புறநகர் மற்றும் உள்பகுதிகளை இணைக்க கூடிய போக்குவரத்து சேவையான மின்சார ரயில்களில் நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணித்து வருகின்றனர். கல்லூரி மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் என பலரும் பயணம் செய்து வருகின்றனர்.

சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு, சென்னை கடற்கரை – வேளச்சேரி, சென்னை கடற்கரை – திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை – பட்டாபிராம் ஆகிய வழித்தடங்களில் தற்போது மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடங்களில் மட்டும் ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர்.

மின்சார ரயில்கள் ஒருநாள் இல்லையென்றாலும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் ரயில்வே நிர்வாகமும் ரயில்களை சரியான முறையில் பராமரித்து வருகிறது. மேலும், இந்த வழித்தடங்களில் அவ்வப்போதும் பராமரிப்பு பணிகளும் நடந்து வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

Also Read : அடுத்த 5 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை… எந்தெந்த மாவட்டங்கள்?

எந்தெந்த வழித்தடத்தில் தெரியுமா?


அந்த வகையில், தற்போது சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே வரும் 17ஆம் தேதி (ஞாயிற்றுகிழமை) மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வரும் 17ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், சென்னை கடற்கரை – பல்லாவரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : சனிக்கிழமை மட்டுமே திருட்டு.. சென்னையில் சிக்கிய திருடன்!

சென்னை கடற்கரை டூ பல்லாவரம் வரை சிறப்பு ரயில்கள்:

சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் சில ரயில்கள் ரத்து செய்யப்படும் அதே நேரத்தில் பல்லாவரம் வரை சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரத்துக்கு காலை 6.15, 6.55, 7.20, 7.45, 8.00, 8.35, 9.38, 10.10, 11.20, மதியம் 12.00, 1.05, 1.30, 2.30, 3.10, 3.45, மாலை 4.10 மணிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

அதே நேரத்தில் பல்லாவரத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு காலை 7.10, 7.45, 8.10, 8.35, 8.55, 9.35, 10.35, 11.05, 11.35, மதியம் 12.10, 12.55, 1.55, 2.25, 3.20, மாலை 4.00, 4.40, 5.05 மணிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Latest News