Chennai Train Cancelled: சென்னையில் மின்சார ரயில்களை நாளை ரத்து.. எந்தெந்த ரூட் தெரியுமா?

ரயில்கள் ரத்து: சென்னையில் மின்சார ரயில்கள் நாளை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் நாளை (செப்டம்பர் 21 ஞாயிற்றுகிழமை) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Chennai Train Cancelled: சென்னையில் மின்சார ரயில்களை நாளை ரத்து.. எந்தெந்த ரூட் தெரியுமா?

சென்னை மின்சார ரயில்

Updated On: 

21 Sep 2024 14:31 PM

சென்னையில் மின்சார ரயில்கள் நாளை முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் நாளை (செப்டம்பர் 21 ஞாயிற்றுகிழமை) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் ரயில் போக்குவரத்து என்பது இன்றியமையாத ஒன்று . குறிப்பாக சென்னை புறநகர் மற்றும் உள்பகுதிகளை இணைக்க கூடிய போக்குவரத்து சேவையான மின்சார ரயியில்கள் இருப்பதால் நாள்தோறும் ஆயிக்கணக்கான பயணிகள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.  பள்ளி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை அனைவரும் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர்.

மின்சார ரயில் ரத்து:

சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு, சென்னை கடற்கரை – வேளச்சேரி, சென்னை கடற்கரை – திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சென்னை கடற்கரை – பட்டாபிராம் ஆகிய வழித்தடங்களில் தற்போது மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடங்களில் மட்டும் ஏராளமான பயணிகள் சென்று வருகின்றனர்.


மின்சார ரயில் சேவை ஒருநாள் இல்லாவிட்டாலும் பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதனால் மின்சார ரயில்களை முறையாக ரயில்வே நிர்வாகம் பராமரித்து வருகிறது.  இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக  அவ்வப்போது மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதும், பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவது அடிக்கடி நடைபெறுகிறது.

Also Read:  ஊழியரை கொடுமைபடுத்திய விவகாரம்.. நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு..

இந்த நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் நாளை (செப்டம்பர் 21 ஞாயிற்றுகிழமை) ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி, காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதன் காரணமாக இந்த நேரத்தில் கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில்கள் இரு மார்க்கத்திலும் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, சென்னை கடற்கரையில் இருந்து காஞ்சிபுரம், அரக்கோணம், திருமால்பூர் செல்லும் மின்சார ரயில் வழக்கம் போல் இயங்கும் என்று  ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த நேரத்தில்?

சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரத்துக்கு காலை 7.20, 7.45, 8.00, 8.35, 9.38, 10.10, 11.20, 12.00, பகல் 1.05, 1.30, 2.30, 3.10, 3.45, மாலை 4.10, 4.30, 4.50, 5.10, 5.50, 6.20, 6..50, 7.00 மணிக்கு சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மறு மார்க்கமாக பல்லாவரத்தில் இருந்து தாம்பரத்திற்கு காலை 8.00, 8.20, 9.00, 9.20, 9.35, 10.20, 11.20, 11.50, 12.20, 12.55, பகல் 1.40, 2.40, 3.10, 4.05, 4.40, 5.25, 5.35, 6.05, 6.25, 6.55, 7.25, 8.00, 8.25, 8.35 மணிக்கு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த நாளும் ரத்து:

சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி செல்லும் இரவு நேர மின்சார ரயில்கள் செப்டம்பர் 23ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரை ரயில்வே பணிமனையில் செப்டம்பர் 23ஆம் தேதி இரவு 19.40 முதல் செப்டம்பர் 24ஆம் தேதி காலை 4.30 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

இதனால் சென்னையில் கடற்கரையில் இருந்து இரவு 8.25, 8.55, 10.20 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்களும், இரவு 8.05 மணிக்கு திருவள்ளூர் செல்லும் ரயிலும், இரவு 10.45 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் ரயிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

Also Read: தமிழ்நாட்டில் இன்று கனமழை.. 3 மாவட்டங்களுக்கு அலர்ட்.. வானிலை மையம் குளுகுளு அப்டேட்!

மறுமார்க்கமாக அதேநாளில் திருவள்ளூரில் இருந்து இரவு 9.35 மணிக்கும், கும்மிடிப்பூண்டியில் இருந்து இரவு 10.45 மணிக்கும், கடற்கரை வரும் ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது. மேலும் செப்டம்பர் 24ஆம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து காலை 4.05 மணிக்கு அரக்கோணம் செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

 

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!