சென்னையில் பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் திடீர் மரணம்.. நடந்தது என்ன?

சென்னை பெரவள்ளூர் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயசித்ரா (வயது 49). இவர் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று இவர் தபால் பணியாக தடய அறிவியல் துறை பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். பிறகு அயனாவரத்தில் வசிக்கும் தனது சகோதரி பாண்டிசெல்வி வீட்டிற்கு சென்று அவருடன் ஜெயசித்ரா பேசி கொண்டிருந்தார்.

சென்னையில் பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் திடீர் மரணம்.. நடந்தது என்ன?

உயிரிழந்த காவல் ஆய்வாளர் ஜெயசித்ரா

Published: 

03 Aug 2024 15:03 PM

சென்னையில் பெண் சிறப்பு உதவி ஆய்வாளர் மரணம்: செம்பியம் மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது சகோதரியிடம் பேசி கொண்டிருந்த போது அவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். சென்னை பெரவள்ளூர் விவேகானந்தர் தெருவைச் சேர்ந்தவர் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயசித்ரா (வயது 49). இவர் செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. நேற்று இவர் தபால் பணியாக தடய அறிவியல் துறை பணிக்கு சென்று விட்டு வீடு திரும்பினார். பிறகு அயனாவரத்தில் வசிக்கும் தனது சகோதரி பாண்டிசெல்வி வீட்டிற்கு சென்று அவருடன் ஜெயசித்ரா பேசி கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வாந்தி எடுத்து மயங்கினார். உடனே அவரது சகோதரி அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிச்சைகாக அனுமதித்தார். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஜெய்சித்ராவிற்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதாகவும், நாடிதுடிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவதாகவும் கூறினர். இதனால் உடனடியாக அவரை அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

Also Read:  தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை.. எந்தெந்த பகுதிகளில்?

இதையடுத்து கெல்லிசில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் வழியில் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து அயனாவரம் போலீசார் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயசித்ரா உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அயனாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன ஜெயசித்ராவிற்கு சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டம் வம்பரம்பட்டி கிராமம் ஆகும். அதனால் பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: ஒலிம்பிக்கில் 2 குளியலறை மட்டுமே.. 10 பேர் பயன்படுத்தும் அவலம்.. வெளியேறிய வீராங்கனைகள்..!

சென்னையில் பெண் சிறப்பு காவல் ஆய்வாளர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக இளைஞர் மற்றும் 50 வயதிற்குட்பட்டவர்களுக்கு திடீர் மாரடைப்பு வந்து உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகமாகி வருகிறது. இதற்கான சரியான காரணம் தெரியவில்லை என்றால் கூட நம் வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் தான் இதற்கு முக்கிய காரணம் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

மனித உடலில் உள்ள இரத்தம் ஏன் உப்பாக இருக்கிறது..?
குழந்தைகளின் ஆரோக்கியத்தை கெடுக்கும் பழக்க வழக்கங்கள்!
இந்தியாவின் பிரபலமான தேயிலை தோட்டங்கள்!
காலிஃபிளவரை இப்படி சுத்தம் செய்யுங்கள்