Fire Accident: மாநகர பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.. 30 நிமிட போராட்டத்திற்கு பின் தீயை அணைத்த வீரர்கள்..
சென்னையில் மாநகர பேருந்து தீப்பற்றி விபத்துக்குள்ளானது. சென்னை பாரிஸில் இருந்து சிறுசேரி வரை 102 எண் கொண்ட பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. சி.என்.ஜி கேஸ் நிரப்பட்ட பேருந்து அடையாறு பேருந்து டிப்போ அருகே எல்.பி சாலை அருகே வந்துக்கொண்டிருந்த போது பேருந்தின் கியர் பாக்ஸில் (gear box) தீப்பொறி கசிந்ததை பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் கண்டனர். உடனடியாக பேருந்தை ஓரம்கட்டி பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக கிழே இறக்கிவிட்டனர். இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
எம்.டி.சி பேருந்தில் தீ விபத்து: பாரிஸ் முதல் சிறுசேரி வரை செல்ல கூடிய 102 சென்னை மாநகர போக்குவரத்து பேருந்து, சென்னை அடையாறு டிப்போ அருகில் சென்று கொண்டிருக்கையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. சிஎன்ஜி கேஸ் நிரப்பப்பட்ட இந்த பேருந்து கடந்த இரண்டு மாதங்களாக இந்த வழியில் சென்று வருவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அரை மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீ முழுவதுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது தீ விபத்தில் சிக்கிய மாநகரப் பேருந்தை அப்புறப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இறக்கிவிடப்பட்ட நிலையில் யாருக்கும் எந்த சேதாரமும் ஏற்படவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
#Chennai MTC bus caught fire on Adyar LB Road.😳 Firefighters arrived quickly.🚒🧑🏻🚒#MTCBus | #Fire pic.twitter.com/6OfF0hU2XP
— Dileep Kumar (@Dileepfeeds) July 2, 2024
சமீப காலமாக மின்சார வாகனங்கள் மற்றும் சி.என்.ஜி கேஸ் வாகனங்கள் அவ்வப்போது தீப்பிடித்து விபத்துக்குள்ளாகி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பலரும் மின்சார அல்லது சி.என்.ஜி வாகனங்களை பயன்படுத்துவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் இன்று சென்னையில் மாநகர பேருந்து தீப்பற்றி விபத்துக்குள்ளானது. சென்னை பாரிஸில் இருந்து சிறுசேரி வரை 102 எண் கொண்ட பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. சி.என்.ஜி கேஸ் நிரப்பட்ட பேருந்து அடையாறு பேருந்து டிப்போ அருகே எல்.பி சாலை அருகே வந்துக்கொண்டிருந்த போது பேருந்தின் கியர் பாக்ஸில் (gear box) தீப்பொறி கசிந்ததை பேருந்து ஓட்டுநரும் நடத்துநரும் கண்டனர்.
Also Read: வாகன நம்பர் பிளேடில் ஸ்டிக்கர் – அறிக்கை தர ஆணை.. உயர்நீதிமன்றம் அதிரடி..
உடனடியாக பேருந்தை ஓரம்கட்டி பேருந்தில் இருந்த பயணிகளை பத்திரமாக கிழே இறக்கிவிட்டனர். இதற்கிடையில் பேருந்தில் தீ மளமளவென பற்றி எரிந்தது. இதன் காரணமாக ஒரு கி.மீ தூரம் வரை இருக்கும் கடைகள், வணிக வளாகங்கள் ஆகியவை மூடும்படி தீயணைப்பு துறையினர் எச்சரிக்கை விடுத்தனர். அப்பகுதியில் இருக்கும் மக்களையும் பத்திரமான இடத்திற்கு கொண்டு சென்றனர். சி.என்.ஜி கேஸ் நிரப்பப்பட்ட பேருந்து என்பதால் தீ விபத்தால் எப்படியான விளைவுகள் இருக்கும் என தெரியவில்லை என்பதால் மக்களை அப்புறப்படுத்தினர்.
அதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் விரைவாக செயல்பட்டு அரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீயை கட்டுக்குள் கொண்டு வந்து முற்றிலுமாக அணைத்தனர். பின்னர் அந்த பேருந்தை அந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மாநகர பேருந்து பிரதான சாலையில் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.