5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மின்சார ரயில் மோதி 4 மாத கர்ப்பிணி பெண், கணவர் உயிரிழப்பு.. சென்னையில் அரங்கேறிய சோகம்..

ரயில் நிலையத்தில் அடிக்கடி ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனை தடுக்க ரயில்வே துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மக்களின் அலட்சிய போக்கால் இந்த விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. ஒரு சிலர் எதிர்ப்பாராத விதமாக விபத்தில் சிக்குகின்றனர். ஆனால் ஒரு சிலர் மன விரக்தியில் தற்கொலை முயற்சியும் மேற்கொள்கின்றனர்.

மின்சார ரயில் மோதி 4 மாத கர்ப்பிணி பெண், கணவர் உயிரிழப்பு.. சென்னையில் அரங்கேறிய சோகம்..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 24 Oct 2024 14:17 PM

ரயில் மோதி தம்பதியினர் உயிரிழப்பு: சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் மின்சார ரயில் மோதி 4 மாத கர்ப்பிணி பெண் மற்றும் கணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயில் நிலையத்தில் அடிக்கடி ரயில் தண்டவாளத்தை கடக்கும் போது அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகிறது. இதனை தடுக்க ரயில்வே துறை தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் மக்களின் அலட்சிய போக்கால் இந்த விபத்துக்கள் நடைபெற்று வருகிறது. ஒரு சிலர் எதிர்ப்பாராத விதமாக விபத்தில் சிக்குகின்றனர். ஆனால் ஒரு சிலர் மன விரக்தியில் தற்கொலை முயற்சியும் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் சென்னை கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தில் மின்சார ரயில் மோதி தம்பதியினர் உயிரிழந்தனர்.

Also Read: மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் 11 ஆம் தேதி வரை பொளக்கப்போகும் மழை..

முகமதி செரிப் (வயது 36) கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்தவர். அதேபோல் ஐஸ்வர்யா (வயது 28) கோழிக்கோடை சேர்ந்தவர். இருவரும் பேசி வந்த நிலையில் அந்த பழக்கம் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில் ஐஸ்வர்யா 4 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சனையாகும் என்பதால் வீட்டில் மறைத்துள்ளார். இதற்கிடையில் முகமது செரிப் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் வீட்டை விட்டு வெளியே வர முடிவு செய்துள்ளனர்.

முகமது செரிப் கார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இதனால் சென்னையிலும் அவருக்கு சில நண்பர்கள் இருந்துள்ளனர். வீட்டை விட்டு வெளியே வர முடிவு செய்த இருவரும் சென்னைக்கு வந்துள்ளனர். சென்னையில் முகமது செரிப் அவரது நண்பரின் உதவியை நாடியுள்ளார். ஐஸ்வர்யா ஏற்கனவே கோழிக்கோடில் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வந்த நிலையில், சென்னையிலும் ஆசிரியர் பணிக்காக விண்ணப்பித்து இருந்தார். விரைவில் அவருக்கு வேலை கிடைக்க இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: பச்சிளம் குழந்தைக்கு விஷப்பால் ஊற்றி கொன்ற தம்பதி.. பிறந்த 9 நாட்களில் கொடூரம்.. அதிர்ச்சி காரணம்!

சென்னை வந்த இருவரும் முகமது செரிப் வீட்டில் தங்க முடிவு செய்துள்ளனர். இன்று காலை 8.30 மணியளவில் சென்னை கூடுவாஞ்சேரி வந்தடைந்துள்ளனர். அப்போது முகமது செரிப் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தண்டவாளத்தை கடந்து நண்பரை பின் தொடர்ந்து சென்றனர். அப்போது நண்பர் தண்டவாளத்தை கடந்து சென்ற நிலையில். பின் வந்த இருவரும், அந்த பகுதியாக வந்த மின்சார ரயில் அவர்கள் மீது மோதியது.

ரத்த வெள்ளத்தில் இருந்த இருவரையும் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் இருவரும் சிகிச்ச்சை பலனின்றி உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த காவல் துறையினர், மரணத்தில் சந்தேகம் இருப்பதால் இருவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Latest News