5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Hooch Tragedy: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு எப்படி ரூ.10 லட்சம் தர முடியும் ? அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

கள்ளச்சாராயம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் கள்ளச்சாரயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்ற அரசின் முடிவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த முகமது கோஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், கள்ளச்சாராயம் குடிப்பது சட்டவிரோத செயல். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை பாதிக்கப்பட்டவர்களாக கருதக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hooch Tragedy: கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு எப்படி ரூ.10 லட்சம் தர முடியும் ? அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..
மாதிரி புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 06 Jul 2024 16:59 PM

சென்னை உயர்நீதிமன்றம்: கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் பலியானவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு எப்படி வழங்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கள்ளக்குறிச்சி, கருணாபுரத்தில் விஷ்ச்சாராயம் குடித்து இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் கடிசி தலைவர் மற்றும் பிரபலங்கள் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தனர். அதே சமயம் தமிழ்நாடு அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டது. அதேசமயம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கள்ளச்சாராயத்தை தடுக்கும் முயற்சியில் மதுவிலக்கு அமலாக்க சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட்டட்து. தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விவகாரம் இன்றளவும் செயல்பாடில் இருப்பதை பலரும் கண்டித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கில் கள்ளச்சாரயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்ற அரசின் முடிவை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த முகமது கோஸ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில், கள்ளச்சாராயம் குடிப்பது சட்டவிரோத செயல். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களை பாதிக்கப்பட்டவர்களாக கருதக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஆம்ஸ்ட்ராங் உடலை கண்டு கதறி அழுத திருமா.. உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை..

தீ விபத்து உள்ளிட்ட விபத்துக்களில் பலியாவோருக்கு குறைந்த இழப்பீடு வழங்கும் நிலையில், விஷச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு எந்த அடிப்படையில் அதிக இழப்பீடு வழங்கப்படுகிறது என்பதை அரசு தெளிவுபடுத்தவில்லை எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் சுதந்திர போராட்ட தியாகிகளோ, சமூக சேவகர்களோ, சமூகத்துக்காக உயிர் தியாகம் செய்தவர்களோ அல்ல என்பதால், அவர்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, விஷசாராயம் குடித்து மரணமடைந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது அதிகம் எனவும், இவ்வளவு அதிக தொகையை எப்படி வழங்க முடியும் எனக் கேள்வி எழுப்பியது. மேலும், இந்த தொகையை மறுபரிசீலனை செய்வது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி உத்தரவிட்டனர் நீதிபதிகள். மேலும் இந்த வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

Also Read: பிஎஃப் உச்ச வரம்பை உயர்த்தும் மத்திய அரசு? ஊழியர்களுக்கு வெளியான முக்கிய தகவல்!

Latest News