Manjolai Tea Estate : மாஞ்சோலை தேயிலை தோட்ட விவகாரம்.. அரசே ஏற்று நடந்தக்கோரிய மனுக்கள் தள்ளுபடி!
High Court | மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசின் டான்டி நிர்வாகம் ஏற்று நடத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கே கிருஷ்ணசாமி, மாஞ்சோலை பகுதியை சேர்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் இன்று (03.12.2024_ தள்ளுபடி செய்தது. இந்த விவகாரம் தொடர்பாக மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை அரசின் டான்டி நிர்வாகம் ஏற்று நடத்த வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கே கிருஷ்ணசாமி, மாஞ்சோலை பகுதியை சேர்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தேயிலை தோட்டம் தொடர்பான அனைத்து மனுக்களையும், சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Vijay : வெள்ள பாதிப்பு.. பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் வரவழைத்து நிவாரண பொருட்கள் கொடுத்த விஜய்!
மாஞ்சோலை தோட்ட விவகாரம்
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு அருகே அமைந்துள்ளது மாஞ்சோலை பகுதி. இங்கு அதிக அளவில் தேயிலைத் தோட்டங்கள் இருப்பதால் இது தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற ஒரு சுற்றுலா தளமாகவும் விளங்குகிறது. இங்கு உள்ள தேயிலை தோட்டங்களில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், தங்கள் குடும்பங்களுடன் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்த தேயிலைத் தோட்டத்தை கடந்த 1929 ஆம் ஆண்டு பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனம் ஒன்று சுமார் 99 ஆண்டுகளுக்கு குத்தகை எடுத்து இருந்தது. அதன்படி, அந்த குத்தகை வரும் 2028 ஆம் ஆண்டுடன் முடிவடைகிறது. ஆனால், அந்த நிறுவனம் அதற்கு முன்பாகவே தோட்டத்தை காலி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதனால் அங்கு பணிபுரிந்து வந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்வதாரம் கேள்விக் குறியாக்கப்பட்டது. அப்போது, நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் நல்ல லாபம் கிடைத்தாலும் கடந்த சில ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருவதால் இந்த முடிவை எடுத்ததாக நிறுவனம் தெரிவித்திருந்தது.
இதையும் படிங்க : TN Weather Report : 11 மாவட்டங்களில் கொட்டித் தீர்க்க போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்!
நீதிமன்றத்தில் மனு தாக்கள் செய்த 6 பேர்
மாஞ்சோலை தேயிலை தோட்டங்களை குத்தகைக்கு முன்பே பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் காலி செய்ய முடிவு செய்த நிலையில் பல தலைமுறைகளாக அங்கு வாழ்ந்து வந்த தொழிலாளர்களை விருப்ப பணி ஓய்வு பெற கட்டாயப்படுத்துவதாக குற்றச்சாட்டு விழுந்தது. இதனைத் தொடர்ந்து மாஞ்சோலை தொழிலாளர்களை கட்டாய விருப்ப பணி ஓய்வு பெற வலியுறுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. தனியார் நிறுவனத்தின் இந்த செயல் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த தனியார் நிறுவனத்தின் செயலுக்கு கடும் எதிர்ப்புகள் தெரிவித்தன. இந்த நிலையில் தான், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கே கிருஷ்ணசாமி, மாஞ்சோலை பகுதியை சேர்ந்த அமுதா, ஜான் கென்னடி, ரோஸ்மேரி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதையும் படிங்க : Crime: அமைச்சருக்கு மிரட்டல்.. நைட்டி அணிந்துகொண்டு வாக்குவாதம்.. போலீசாரை அலறவிட்ட போதை நபர்!
மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம்
மாஞ்சோலை தொழிலாளர்களை கட்டாய பணி ஓய்வு செய்ய வலியுறுத்துவதாக தாக்கல் செய்யப்பட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மாஞ்சோலை தோட்டத்தை அரசு ஏற்று நடத்தக்கோரி தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், மாஞ்சோலை தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு தமிழக அரசு பணப் பலன்களை வழங்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம தனது தீர்ப்பில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.