5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

65 பேரை காவு வாங்கிய கள்ளச்சாராயம்… மெத்தனால் கலப்பு எவ்வளவு? தமிழக அரசு அதிர்ச்சி ரிப்போர்ட்!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில், இதுவரை 132 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடியின் 6 குழுக்கள் விசாரித்து வருகின்றது. கள்ளக்குறிச்சியில் கைபற்றிய விஷ சாராயத்தில் 8.6 முதல் 29.7 வரை மெத்தனால் கலந்துள்ளதக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

65 பேரை காவு வாங்கிய கள்ளச்சாராயம்… மெத்தனால் கலப்பு எவ்வளவு? தமிழக அரசு அதிர்ச்சி ரிப்போர்ட்!
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 03 Jul 2024 16:04 PM

65 பேரை காவு வாங்கிய கள்ளச்சாராயம்: கள்ளக்குறிச்சி விஷ சாராயத்தில் 8.6 முதல் 29.7 சதவீதம் மெத்தனால் கலந்துள்ளது என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில், இதுவரை 132 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடியின் 6 குழுக்கள் விசாரித்து வருகின்றது. 2023 ஆம் ஆண்டு மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் நடைபெற்ற விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர். மரக்காணம் மற்றும் செங்கல்பட்டு சம்பவத்தில் 99 சதவீதம் மெத்தனால் இருந்தது கண்டறியப்பட்டது.

தற்போது கள்ளக்குறிச்சியில் கைபற்றிய விஷ சாராயத்தில் 8.6 முதல் 29.7 வரை மெத்தனால் கலந்துள்ளதக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கள்ளச்சாராய புகார்கள் தொடர்பாக மாவட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு வாட்ஸ் அப் குழுக்கள் வழங்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகளுக்கு வழங்கி வரும் மெத்தனால்கள் கண்காணிக்கபடுவதகவும், கள்ள சாராயத்தை ஒழிப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: நீட் தேர்வுக்கு இதுதான் தீர்வு.. மாணவர்கள் விழாவில் யோசனை சொன்ன நடிகர் விஜய்!

மெத்தனால் கலப்பு எவ்வளவு?

இந்த குற்றங்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வருவதாகவும், மாநில அரசு இந்த சம்பவம் குறித்து கவனமாக விசாரித்து வருகிறது. தற்போது நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உரிய மருத்துவ உதவிகள் வழங்கி உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளார். மாநில காவல் துறை விசாரித்து வரும் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்ற அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மதுவிலக்கு சட்டத்தில் புதிய திருத்தம் கொண்டு வந்திருப்பதாகவும் கள்ளச்சாராய குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை அதிகரித்து இருப்பதாகவும். இந்த சட்டத்தில் ஜாமீன் வழங்குவதற்கு கடுமையான நிபந்தனைகள் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும் அறக்கையில் தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ஒப்புதல் கிடைத்தவுடன் விரைவில் அமலுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளச்சாராயத்திற்கு இதுவரை 65 பேர் மரணம் அடைந்துள்ளனர், 145 சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். உரிய முறையில் விசாரணை நடைபெற்று வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற தேவையில்லை மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்த வழக்குகள், பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி மிகமது சபீக் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், தமிழக அரசு தலைமை வழக்கறிஞரின் தாய் இறந்து விட்டதால் வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Also Read: அடுத்த 7 நாட்களுக்கு மழை தொடரும்.. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்..