5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

கொடநாடு வழக்கு.. எடப்பாடி பழனிசாமிக்கு நஷ்ட ஈடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

கொடநாடு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனராக கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் காவல் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. விசரணையின் அடிப்படையில் பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

கொடநாடு வழக்கு.. எடப்பாடி பழனிசாமிக்கு நஷ்ட ஈடு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 07 Nov 2024 17:27 PM

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டது. 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதியன்று கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை நடைபெற்றது. அங்கிருந்த காவலாளியும் கொல்லப்பட்டார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த ஒரு சில மாதங்களில் இந்த சம்பவம் நடைபெற்றதை தொடர்ந்து இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதாவிற்கு சொந்தமான பங்களாவில் இந்த கொள்ளை சம்பவம் நடந்தது. அங்கிருந்து ஏராளமான ஆவணங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

அதனை தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனராக கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் காவல் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. விசரணையின் அடிப்படையில் பலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சம்மன் அனுப்புவதோடு மட்டுமல்லாமல், தொழில்நுட்ப ரீதியாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதில் முக்கியமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக பல தரப்பில் இருந்து கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. மேலும் சாலை விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜ் மரணத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படிகிறது.

இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சாலை விபத்தில் உயிரிழந்த கனகராஜின் சகோதரர் தனபால், சமீப காலமாக, அந்த வழக்கு தொடர்பாக பேட்டியளித்து, அதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. இதையடுத்து, கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தன்னை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதிக்கக் கோரியும், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதின்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

மேலும் படிக்க: பயிர்க்கழிவுகள் எரித்தால் ரூ. 30,000 வரை அபராதம் வசூலிக்கப்படும் – மத்திய அரசு அதிரடி..

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு:

இந்த மனுவில், கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள நிலையில், தன் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில், தனது அரசியல் எதிரிகளின் தூண்டுதலால், தனபால் பொய்யான தகவல்களை கூறி வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில், எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று, ஆணையராக வழக்கறிஞர் எஸ். கார்த்திகை பாலனை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும் படிக்க:  13 ஆம் தேதி வரை சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு.. கடலோர மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிக்கை என்ன?

வழக்கறிஞர் ஆணையர் எஸ்.கார்த்திகை பாலன், எடப்பாடி பழனிசாமியின் சாட்சியத்தை பதிவுசெய்து, அதுகுறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டீக்காராமன், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி பேச தனபாலுக்கு தடை விதித்ததுடன், ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மான நஷ்டஈடு வழங்கவும் தனபாலுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Latest News