5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

உதயநிதி ஸ்டாலின் உடை விவகாரம்.. அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் என அனைத்திற்கு பேண்ட் சட்டை அணிந்து வருகிறார். நடுவில் உதயநிதி ஸ்டாலின் உடை குறித்து எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் ஆடை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் உடை விவகாரம்.. அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..
கோப்பு புகைப்படம்
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Oct 2024 14:46 PM

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி – ஷர்ட் அணிந்து வர எதிர்ப்பு தெரிவித்த வழக்கில், அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்த அரசாணை, அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு பொruந்துமா? டி சர்ட் கேஷுவல் உடையா? அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா? என விளக்கமளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டின் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். வழக்கமாக எல்லா அமைச்சர்களும் அரசு நிகழ்ச்சி மட்டுமல்லாமல் எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் வேட்டி சட்டை அணிந்து கலந்துக்கொள்வார்கள்.

சர்ச்சைக்கு உள்ளான உதயநிதியின் டி-ஷர்ட்:

ஆனால் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகள் என அனைத்திற்கு பேண்ட் சட்டை அணிந்து வருகிறார். நடுவில் உதயநிதி ஸ்டாலின் உடை குறித்து எதிர்க்கட்சியான அதிமுக தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது. அந்த வகையில் தற்போது உதயநிதி ஸ்டாலின் ஆடை குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதாவது அரசு நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சி சின்னம், கொடி பொறிக்கப்பட்ட டி ஷர்ட் அணிந்து வருவது அரசுக்கு எதிரானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: ஆதார் அட்டையை சான்றாக எடுக்க கூடாது.. உச்சநீதிமன்றம் சொன்ன முக்கிய தீர்ப்பு.. முழு விவரம் இதோ!

சென்னை சேலையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்திய குமார் தாக்கல் செய்துள்ள மனுவில், அனைத்து அரசு ஊழியர்களும் முறையான ஆடை அணிந்து வர வலியுறுத்தும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார். ஃபார்மல் பேண்ட் ஷர்ட் அல்லது தமிழர் பாரம்பரிய ஆடையான வேட்டி சட்டை அணிந்து வர வேண்டும் என அரசாணையில் கூறியுள்ள போதிலும் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு நிகழ்ச்சிகளில் உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

Also Read: தீபாவளி அன்று தமிழகத்தில் கொட்டப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்? வானிலை சொல்வது என்ன?

அரசு ஊழியர்கள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போது அரசியல் கட்சிகளின் சின்னத்தை வெளிப்படுத்த தடை உள்ளதாகக் கூறியுள்ள மனுதாரர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் செயல் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்பதால் அரசு நிகழ்ச்சிகளில் முறையான ஆடைகளை அணிந்து வரும்படி அவருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசு பதிலளிக்க உத்தரவு:

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, துணை முதல்வர் டி சர்ட் அணிவது அரசாணைக்கு எதிரானது என மனுதாரர் தெரிவித்தார். தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தமிழக அரசின் அரசாணை அரசு ஊழியர்களுக்கு தான் பொருந்தும் என விளக்கமளித்தார்.

இதையடுத்து, அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்த அரசாணை, அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு பொருந்துமா? டி சர்ட் கேஷுவல் உடையா? அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா? என பதில்மனு தாக்கல் செய்யும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

Latest News