கல்வி நிறுவனங்களில் சாதி பெயர்கள் நீக்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.. - Tamil News | chennai high court passed order to tamilnadu government to remove caste and community related named from school | TV9 Tamil

கல்வி நிறுவனங்களில் சாதி பெயர்கள் நீக்க உத்தரவு – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..

Published: 

27 Jul 2024 09:38 AM

கல்வராயன் மலைப்பகுதி மக்களின் மேம்பாடு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாட்டுக்கு எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டு, தமிழக ஆதி திராவிடர் நலத் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் 80 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கல்வி நிறுவனங்களில் சாதி பெயர்கள் நீக்க உத்தரவு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..

மாதிரி புகைப்படம்

Follow Us On

சென்னை உயர்நீதிமன்றம்: கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாட்டுக்கு எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை தாக்கல் செய்த அறிக்கை குறித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி விஷ சாராய மரண சம்பவத்தை தொடர்ந்து, கல்வராயன் மலைப்பகுதி மக்களின் மேம்பாடு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம், தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்வராயன் மலைப்பகுதி மக்கள் மேம்பாட்டுக்கு எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டு, தமிழக ஆதி திராவிடர் நலத் துறை சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கல்வராயன் மலைப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் 80 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், 7 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் பள்ளி, மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வெறும் 10 நிமிடத்தில் தித்திப்பான பாதாம் பிசின் பாயசம் ரெடி..! குழந்தைகளுக்கு செஞ்சிக்கொடுங்க..

கூட்டுறவு வங்கிகள் மூலம் 88 கோடி ரூபாய் கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் தெரு விளக்குகள்,சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளரின் அறிக்கை திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என தெரிவித்த நீதிபதிகள், கடந்த 10 ஆண்டுகளில் 80 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது என்றால் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு தூக்கிச் செல்வது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர்.

ஏழு கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் பள்ளி, மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளது தொடர்பான தெளிவான விவரங்கள் இல்லை எனவும், கூட்டுறவு வங்கிகள் மூலம் 88 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டது குறித்த விவரங்களும் முழுமையாக இல்லை எனத் தெரிவித்தனர்.

ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் செலவில் பொருத்தப்பட்ட தெரு விளக்குகள், சோலார் விளக்குகள் பயன்பாட்டில் உள்ளனவா? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இப்படி ஒரு அறிக்கையை தாக்கல் செய்யாமலேயே இருந்திருக்கிலாம் என அதிருப்தி தெரிவித்தனர்.

சமூக நீதி பற்றி பேசிவரும் அரசு, பழங்குடியினர் பள்ளி என அழைப்பது ஏன்? அரசு பள்ளி என மட்டும் அழைக்கலாமே? எனவும், 21ம் நூற்றாண்டிலும் அரசு பழங்குடியின நல பள்ளிகள் என அழைப்பது குறித்தும் நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

அரசு கல்வி நிறுவனங்களில் பழங்குடியின பள்ளி, கல்லூரி என வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க தலைமை செயலாளருக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் தலைமையில் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும். அரசு குழுவுடன் மூத்த வழக்கறிஞர் தமிழ்மணி உடன் செல்ல வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

மேலும் படிக்க: கோலாகலமாக தொடங்கிய பாரிஸ் ஒலிம்பிக்.. இன்றைய போட்டி விவரங்கள்..

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version