5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Northeast Monsoon: வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.. எச்சரிக்கும் வானிலை..

வடகிழக்கு பருவ மழையை பொறுத்தவரை அக்டோபர் 3 வது வாரத்தில் ( அக்டோபர் மத்தியில்) தொடங்க வாய்ப்பு உள்ளது. 3 மற்றும் 4 வது வாரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 2021 ல் இயல்பை விட 63 சதவீதம் அதிகம் எனவும், வட தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகமாக இருக்கும் என்றும், தென் தமிழகத்தில் இயல்பை விட குறைவாக இருக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Northeast Monsoon: வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.. எச்சரிக்கும் வானிலை..
கோப்பு புகைப்படம்
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Published: 02 Oct 2024 16:13 PM

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 3 வது வாரத்தில் ( அக்டோபர் மத்தியில் ) தொடங்க உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மனடல இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை பொறுத்தவரை தென் தமிழகத்தில் குறைவாகவும் வட தமிழகத்தில் அதிகமாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்தாண்டு 74 சதவீதமும், இந்தாண்டு 43 சதவீதம் இயல்பை விட அதிகமாக மழை பதிவாகி உள்ளது. தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில் வடகிழக்கு பருவமழை குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, ” தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப் 30 வரை தமிழகம், புதுவை, காரைக்காலில் பதிவான மழையின் அளவு 39 செ.மீ ஆக உள்ளது. இந்த காலகட்டத்தில் இயல்பான அளவு 33 செ.மீ. இயல்பை விட 18% அதிக மழைப்பொழிவு பதிவாகி உள்ளது. 19% வரை கூடுதலாகவோ / குறைவாகவோ இருக்கும்பட்சத்தில் இயல்பான அளவாகவே கருதப்படுகிறது.

மேலும் படிக்க:  களைக்கட்டும் வான் சாகச நிகழ்ச்சிகள்.. சென்னை மெரினா கடற்கரை ரெட் சோனாக அறிவிப்பு..

திருநெல்வேலியில் இயல்பை விட மிக அதிகமாகவும், 17 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாகவும், 16 மாவட்டங்களில் இயல்பான அளவிலும், 6 மாவட்டங்களில் இயல்பை விட குறைவாகவும் மழை பதிவாகி உள்ளது. தஞ்சை, புதுக்கோட்டை நீங்கலாக டெல்டா மாவட்டங்களில் இயல்பைவிட குறைவாக மழை பதிவாகி உள்ளது. தென்மேற்கு பருவமழையின் கடந்தாண்டை ஒப்பிடும் போது தமிழகத்தில் இயல்பைவிட 14 சதவீதம் அதிகமாக மழை பதிவாகி உள்ளது. கடந்தாண்டு 8 சதவீதம் இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகி உள்ளது. சென்னையில் கடந்தாண்டு 74 சதவீதமும், இந்தாண்டு 43 சதவீதம் இயல்பை விட அதிகமாக மழை பதிவாகி உள்ளது.

கேரளா, தமிழகம், தெற்கு கர்நாடகா, ஆந்திர பிரதேசம், ராயலசீமா ஆகிய பகுதிகளை வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பதிவாக வாய்ப்பு உள்ளது. வட தமிழகத்தில் இயல்பைவிட அதிகமாகவும், தென் தமிழகத்தில் இயல்பு, இயல்பைவிட குறைவாகவும் வடகிழக்கு பருவமழை பதிவாக வாய்ப்பு உள்ளது.

மேலும் படிக்க: பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவர்கள்.. பள்ளிக்கு வெளியே அமர வைத்த நிர்வாகம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

வடகிழக்கு பருவ மழையை பொறுத்தவரை அக்டோபர் 3 வது வாரத்தில் ( அக்டோபர் மத்தியில்) தொடங்க வாய்ப்பு உள்ளது. 3 மற்றும் 4 வது வாரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 2021 ல் இயல்பை விட 63 சதவீதம் அதிகம் எனவும், வட தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிகமாக இருக்கும் என்றும், தென் தமிழகத்தில் இயல்பை விட குறைவாக இருக்கும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, நாளை ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

வரும் 4 ஆம் தேதி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அக்டோபர் 5 ஆம் தேதி, தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News