5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

சென்னையில் அதிர்ச்சி.. பிஎம்டபிள்யூ கார் மோதி இளைஞர் பலி.. 100 மீ தூக்கி வீசப்பட்ட கோரம்!

Chennai Accident : சென்னையில் பிஎம்டபிள்யூ கார் மோதிய விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கார் மோதிய விபத்தில் இளைஞர் சுமார் 100 மீட்டர் வரை தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் அதிர்ச்சி.. பிஎம்டபிள்யூ கார் மோதி இளைஞர் பலி.. 100 மீ தூக்கி வீசப்பட்ட கோரம்!
உயிரிழந்த இளைஞர்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 21 Nov 2024 08:17 AM

சென்னையில் பிஎம்டபிள்யூ கார் மோதிய விபத்தில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கார் மோதிய விபத்தில் இளைஞர் சுமார் 100 மீட்டர் வரை தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பாண்டி பஜார் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் குமார்.  இவர் மனைவி மற்றும் ஐந்து வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். இவர் தெலுங்கு செய்தி தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார். சில காரணங்களுக்கான வேலையில் இருந்து நின்ற அவர், யூடியூப் சேனலை நடத்தி வந்தார். இதற்கிடையில், குடும்ப செலவுக்காக ரேபிடோ பைக் ஓட்டி வந்தார்.

பிஎம்டபிள்யூ கார் மோதி இளைஞர் பலி

இந்த நிலையில், இவர் நேற்று இரவு தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.  அப்போது, அந்த வழியாக அதிகவேகமாக பிஎம்டபிள்யூ சொகுசு கார் வந்துக் கொண்டிருந்தது.

அதிவேகமாக வந்த பிஎம்டம்யூ கார், பிரதீப் குமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. கார் மோதியதில் சாலையில் இருந்த இரும்பு தடுப்புகளில் இருசக்கர வாகனம்  மோதியதில், அவர் புதரில் தூக்கி வீசப்பட்டார்.  100 மீட்டர் தூரம் வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதில் கார் பலத்த சேதம் அடைந்தது. மேலும், கார் ஓட்டுநர் தப்பி ஓடியுள்ளார். அவர் முருகன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

Also Read : மேகவெடிப்பு.. ராமேஸ்வரத்தில் 41 செ.மீ மழை.. கரைபுரளும் வெள்ளம்!

100 மீ தூக்கி வீசப்பட்ட கோரம்

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பிரதீப் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கார் ஓட்டுநர் முருகன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில், பிரதீப் தெலுங்கு செய்தி சேனலில் பணிபுரிந்து வந்தார். ஆனால், சில காரணங்களுக்கான வேலையில் இருந்து நின்ற அவர், பைக் டாக்ஸியை ஓட்டினார். பின்பு, ஒரு யூடியூப் சேனலைத் தொடங்கினார்.

அவருக்கு மனைவி மஞ்சு மற்றும் ஐந்து வயது மகள் வாஹினி உள்ளனர். அவர் பைக் டாக்சி ஓட்டுநராக பணிபுரிவது அவரது மனைவிக்கு தெரியாது என அவரது நண்பர்கள் தெரிவித்தனர். பிரதீப் குமுர் வாடிக்கையாளரை ஒருவரை சந்திப்பதற்காக தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் உயிரிழந்தார்.

Also Read : தஞ்சாவூரில் ஆசிரியை படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.. பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிப்பு

அந்த வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் BMW பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் தப்பியோடிய வழியைக் கண்டறிய அருகிலுள்ள பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருவதாக தெரியவந்துள்ளது.

தொடரும் சாலை விபத்துகள்

நாட்டில் சாலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சாலையில் செல்லும்போது மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் எனவும், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், பல்வேறு இடங்களில் விபத்து அரங்கேறி வருகின்றனர்.

மேலும், சமீப நாட்களில் கோர விபத்துகள் நடந்து வருகின்றனர். குறிப்பாக, உத்தரகாண்ட் மாநிலத்தில் கார் விபத்தில் 7 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மதுபோதையில் இருந்த அவர்கள், லாரி மீது கார் மோதியில் அவர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலும், அவர்களின் உடல்கள் சாலைகளில் ஆங்காங்கே சிதறி கிடந்திருந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுபோன்ற கோர விபத்துகளை தடுக்க மத்திய, மாநில அரசுகளும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

Latest News