Chennai: ஆசையாக ஆர்டர் செய்த பிரியாணி.. தயிர் பச்சடியில் இருந்த புழுவால் அதிர்ச்சி..!

சமீப காலமாக உணவில் புழு கிடப்பதும், கரப்பான் பூச்சி இருப்பதும், மனித விரல் இருப்பதும் வாடிக்கையாகி வருகிறது. வாடிக்கையாளர்கள் இதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பகிர்ந்து வருகின்றனர். இந்த பதிவுகளை தொடர்ந்து சில இடங்களில் உணவுத்துறை அதிகாரிகள் உணவகங்களில் சோதனை மேற்கொண்டு சீல் வைத்தும் நோட்டீஸ் அனுப்பியும் வருகின்றனர். ஆனாலும் இந்த சம்பவங்கள் குறைந்த பாடு இல்லை. தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Chennai: ஆசையாக ஆர்டர் செய்த பிரியாணி.. தயிர் பச்சடியில் இருந்த புழுவால் அதிர்ச்சி..!

பிரியாணி ரைத்தாஅவில் இருந்த புழு

Updated On: 

01 Jul 2024 16:06 PM

பிரியாணி – தயிர் பச்சடியில் இருந்த புழு: சென்னை வில்லிவாக்கம் சேர்ந்த ஒருவர் பிரியாணியை ஆர்டர் செய்துள்ளார். ஆசையாக பிரியாணி சாப்பிட இருந்த அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. பிரியாணி உடன் வந்த தயிர் பச்சடியில் ஏதோ வித்தியாசமாக கிடந்துள்ளது அவர் உற்று நோக்கினார். அதன் பின் அந்த ரைத்தாவில் இருந்தது புழு என தெரியவந்தது. உடனடியாக உணவகத்திற்கு தொடர்பு கொண்டு புகார் அளித்த போது புதிதாக வேறு உணவை மாற்றி கொடுத்ததாக கூறப்படுகிறது. கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை இருந்த போது உணவகங்களில் இருந்து வீட்டிற்கு சாப்பாடு எடுத்து வர பல்வேறு செயலிகள் செயல்பாட்டில் இருந்தது, இன்றைய காலக்கட்டத்தில் நாம் அனைவருமே வேலையில் பிசியாக இருப்பதால் நமக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்து வீட்டில் சாப்பிடுகிறோம்.

ஆனால் ஆர்டர் செய்யப்படும் உணவின் தரம் எப்படி இருக்கிறது என்பது பெரும் கேள்விக்குறியாக உள்ளது. சமீப காலமாக உணவில் புழு கிடப்பதும், கரப்பான் பூச்சி இருப்பதும், மனித விரல் இருப்பதும் வாடிக்கையாகி வருகிறது. வாடிக்கையாளர்கள் இதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பகிர்ந்து வருகின்றனர். இந்த பதிவுகளை தொடர்ந்து சில இடங்களில் உணவுத்துறை அதிகாரிகள் உணவகங்களில் சோதனை மேற்கொண்டு சீல் வைத்தும் நோட்டீஸ் அனுப்பியும் வருகின்றனர். ஆனாலும் இந்த சம்பவங்கள் குறைந்த பாடு இல்லை. தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவது மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Also Read: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்.. 11 பேருக்கு 3 நாள் காவல்..!

அந்த வகையில் சென்னை வில்லிவாக்கம் ராஜாஜி நகரைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் குமார். இவர் ஷெனாய் நகரில் உள்ள பிரபல உணவகமான புகாரியில் இருந்து தனது மனைவி, குழந்தையோடு சேர்ந்து சாப்பிட சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி மற்றும் சிக்கன் 65 ஆகியவை ஆர்டர் செய்துள்ளார். அந்த ஆர்டர் வீட்டிற்கு வந்ததும் ஆசையுடன்  சாப்பிட இருந்தனர். அப்போது பிரியாணியுடன் வந்த தயிர் பச்சடியில் இறந்த நிலையில் புழு ஒன்று இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். காசு கொடுத்து வாங்கிய உணவில் இப்படி புழு இருப்பதை கண்டதும் உடனடியாக ஜெகதீஷ் ஹோட்டல் உரிமையாளரிடம் புகைப்படம் எடுத்து அனுப்பி புகார் அளித்துள்ளார்.

உடனடியாக அந்த உணவகத்தில் இருந்து இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாது என்றும் அந்த உணவுக்கு பதிலாக புதிய உணவை மாற்றி கொடுத்துள்ளனர். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பிரபல உணவத்தில் இது போன்ற நிகழ்வு நடந்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே சமயம் இது போன்ற தொடர் சம்பவங்கள் நடைபெற்று வருவதால் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து சாப்பிடுவதில் மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

Also Read:  2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. 3 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை..

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?