Chennai Metro Rail: சென்னை மெட்ரோவை நாடிச் செல்லும் மக்கள்.. ஒரு கோடியை நெருங்கும் பயணிகளின் எண்ணிக்கை..
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,15,008 பயணிகளும், மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகளும், மே மாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84,33,837 பயணிகளும் மற்றும் ஜூலை மாதத்தில் 95,35,019 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 12.07.2024 அன்று 3,50,545 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில்: மக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் அதிக கட்டணம் என்பதால் மக்கள் பெரிதும் பயன்படுத்தாத நிலையில், இன்று பெரும்பாலான மக்கள் மெட்ரோ ரயில் பயணத்தையே நம்பியுள்ளனர். சென்னையில் பச்சை வழித்தடம், நீல வழித்தடம் என இரண்டு வழித்தடங்கள் செயல்பாட்டில் உள்ளது. மேலும் இந்த வழித்தடங்களை விரிவாக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் சுமார் 95.35 லட்சம் மக்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். மெட்ரோ ரயில் பயன்பாட்டிற்கு வந்தது முதல் அதிகப்படியான மக்கள் பயணம் கொண்டது இதுவே ஆகும்.
மேலும் படிக்க: 244 நாட்கள் கோமாவில் இருந்து மீண்டு வந்த நபர்.. விடாமல் துரத்திய விதியால் உயிரிழந்த சோகம்..
இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 11,01,182 பயணிகள் மெட்ரோ இரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும் இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,15,008 பயணிகளும், மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகளும், மே மாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84,33,837 பயணிகளும் மற்றும் ஜூலை மாதத்தில் 95,35,019 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 12.07.2024 அன்று 3,50,545 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
2024, ஜூலை மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையில் 39,72,106 1 (Online QR 1,83,797; Static QR 2,77,665; Paper QR 22,09,334; Paytm 4,53,590; Whatsapp 4,95,030; PhonePe 3,16,270; ONDC 36,420), பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 35,31,291 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 30,675 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 4,468 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 19,96,479 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.
மேலும் படிக்க: உலக தாய்ப்பால் வாரம்: தமிழகத்தில் தாய்ப்பால் கொடுக்கும் விகிதம் உயர்ந்துள்ளது – அமைச்சர் மா. சுப்பிரமணியன்..
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் Travel Card, வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.