Chennai Metro Rail: மெட்ரோ ரயிலில் குவியும் மக்கள்.. ஒரே மாதத்தில் 84 லட்சம் பேர் பயணம்..! – Tamil News (தமிழ் செய்தி): Breaking Tamil Samachar, and Latest Tamil News Live | TV9 Tamil

Chennai Metro Rail: மெட்ரோ ரயிலில் குவியும் மக்கள்.. ஒரே மாதத்தில் 84 லட்சம் பேர் பயணம்..!

Published: 

01 Jul 2024 15:41 PM

2024 ஜூன் மாதத்தில் மட்டும் சுயுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 37,05,316 பேரும் (Online QR 1,86,140, Static QR 2,55,839; Paper QR 21,30,806; Paytm 4,06,230; Whatsapp-4,33,352; PhonePe - 2,72,300; ONDC - 20,649), பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 31,33,011 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 30,752 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 3,757 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 15,61,001 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

Chennai Metro Rail: மெட்ரோ ரயிலில் குவியும் மக்கள்.. ஒரே மாதத்தில் 84 லட்சம் பேர் பயணம்..!

மாதிரி புகைப்படம்

Follow Us On

மெட்ரோ ரயில் பயணிகள்: மக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. தொடக்கத்தில் அதிக கட்டணம் என்பதால் மக்கள் பெரிதும் பயன்படுத்தாத நிலையில், இன்று பெரும்பாலான மக்கள் மெட்ரோ ரயில் பயணத்தையே நம்பியுள்ளனர். சென்னையில் பச்சை வழித்தடம், நீல வழித்தடம் என இரண்டு வழித்தடங்கள் செயல்பாட்டில் உள்ளது. மேலும் இந்த வழித்தடங்களை விரிவாக்கம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் சென்னை மெட்ரோ ரயிலில் சுமார் 84.33 லட்சம் மக்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன் அதிகபட்சமாக மெட்ரோ ரயிலில் 87 லட்சம் மக்கள் பயணம் மேற்கொண்டனர். மக்களின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிறுவனம் தரப்பில் பல்வேறு புதிய வசதிகள் கொண்டு வரப்படுவது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில், ” சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும். மெட்ரோ இரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது அந்த வகையில் கடந்த மாதம் சென்னை மெட்ரோ இரயில்களில் 84,33,837 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

01.01.2024 முதல் 31.01.2024 வரை மொத்தம் 84,63,384 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

01.02.2024 முதல் 29.02.2024 வரை மொத்தம் 86,15,008 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

01.03.2024 முதல் 31.03.2024 வரை மொத்தம் 86,82,457 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

01.04.2024 முதல் 30.04.2024 வரை மொத்தம் 80,87,712 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

01.05.2024 முதல் 30.05. 2024 வரை மொத்தம் 84.21.072 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக 21.06.2024 அன்று 3,27,110 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2024 ஜூன் மாதத்தில் மட்டும் சுயுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 37,05,316 பேரும் (Online QR 1,86,140, Static QR 2,55,839; Paper QR 21,30,806; Paytm 4,06,230; Whatsapp-4,33,352; PhonePe – 2,72,300; ONDC – 20,649), பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 31,33,011 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 30,752 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 3,757 பயணிகள் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 15,61,001 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில்களில் பயணிப்பவர்களுக்கு க்யுஆர் குறியீடு (OR Code) பயணச்சீட்டு, பயண அட்டைகள் (Travel Card), வாட்ஸ்அப் டிக்கெட், Paytm App மற்றும் PhonePe போன்ற அனைத்து வகையாக பயணச்சீட்டுகளுக்கும் 20% கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் வாட்ஸ்அப் டிக்கெட் (+91 83000 86000) மூலமாக மற்றும் Paytm App மூலமாகவும் பயணிகள் தங்கள் பயணச்சீட்டுகளை பெற்று கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version