5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Metro Rail: ஸ்தம்பித்த மெரினா.. சென்னை மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்.. நோட் பண்ணுங்க!

விமான சாகச நிகழ்ச்சி: சென்னையில் விமானப்படை சாகசத்தை கண்டுகளித்து திரும்பும் மக்களின் வசதிக்காக 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. வண்ணாரப்பேட்டை முதல் ஏஜி டி.எம்.எஸ் வரை 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Metro Rail: ஸ்தம்பித்த மெரினா.. சென்னை மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்.. நோட் பண்ணுங்க!
சென்னை மெட்ரோ
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 06 Oct 2024 14:58 PM

சென்னையில் விமானப்படை சாகசத்தை கண்டுகளித்து திரும்பும் மக்களின் வசதிக்காக 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. வண்ணாரப்பேட்டை முதல் ஏஜி டி.எம்.எஸ் வரை 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை விமான நிலையம் வரை 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. மேலும், சென்னை சென்ட்ரல் முதல் மவுண்ட் வரை வழக்கம் போல் 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணிக்கு பிரம்மாண்டமாக விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 72 விமானங்கள் கலந்து கொண்டன.

விமான சாகச நிகழ்ச்சி:

அதன்படி, சுகோய்-30 எம்கேஐ, ரஃபேல், மிராஜ் 2000, மிக்-29 மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போன்ற போர் விமானங்கள் சாகசத்தை நிகழ்த்தின. சென்னையில் கடந்த 2003ஆம் ஆண்டு விமான சாகச நிகழ்ச்சி நடந்த நிலையில், 21 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் சென்னையில் இன்று நடைபெற்றது.

இதனால் மக்கள் கூட்டம் மெரினாவில் அலைமோதியது. இந்த வான் சாகச நிகழ்ச்சியை காண பொதுமக்களுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டது. விமான சாகச நிகழ்ச்சியை காண ஏராளமான மக்கள் மெரினாவில் குவிந்தனர். இதனால் மெரினாவே ஸ்தம்பித்தது.

கொளுத்தும் வெயிலையும் நினைக்காமல் மக்கள் கூட்டம் மெரினாவில் அலைமோதியது. மக்கள் குடைகளுடன் மெரினா சென்று, விமான சாகச நிகழ்சசியை கண்டு களித்தனர். குறிப்பாக இன்று ஞாயிற்றுகிழமை என்பதால் மக்கள் அதிகளவு குவிந்தனர். இதனால், சென்னை முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும், வேளச்சேரி ரயில் நிலையம், திருவல்லிகேணி ரயில் நிலையம், எழும்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதோடு, பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் நிலையங்களிலும் மக்கள் நிரம்பி வழிந்தன. விமான சாகச நிகழ்ச்சி மக்கள் கண்டு களிக்க ஏதுவாக, மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளது.

Also Read: மெரினாவில் மக்கள் அலை.. விமான சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல்.. 20 பேருக்கு மயக்கம்!

இன்று காலை 8 மணி முதல் சென்னையின் பல்வேறு பகுதியில் இருந்து அண்ணா சதுக்கத்திற்கு வழக்கமாக இயக்கப்படும் 120 பேருந்துகளுடன் கூடுதலாக 75 பேருந்துகளும், அரசினர் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 25 சிற்றுந்துகளும் இயக்கப்படுகிறது.

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்

அதாவது, அரசினர் பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சென்னை பல்கலைக்கழகம் வரை 3 நிமிட இடைவெளியில் சிற்றுந்துகளும், அதேபோல் டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள விஎம் தெரு வரை 2 நிமிட இடைவெளியிலும் மொத்தம் 25 சிற்றுந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும், மக்கள் கூட்டம் மெட்ரோ, ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதுகிறது.  இதனை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் நிர்வாகம் 3.5 நிமிடத்திற்கு ஒரு மெட்ரோ ரயிலை இயக்க முடிவு செய்துள்ளது.  சென்னையில் விமானப்படை சாகசத்தை கண்டுகளித்து திரும்பும் மக்களின் வசதிக்காக இந்த முடிவை மெட்ரோ ரயில் நிர்வாகம் எடுத்துள்ளது.

Also Read: மழைக்கு ரெடியா மக்களே..! 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை..

வண்ணாரப்பேட்டை முதல் ஏஜி டி.எம்.எஸ் வரை 3.5 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சென்னை விமான நிலையம் வரை 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. மேலும், சென்னை சென்ட்ரல் முதல் மவுண்ட் வரை வழக்கம் போல் 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest News