Chennai Metro Rail: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. டைமிங் நோட் பண்ணிக்கோங்க பயணிகளே!

சென்னை மெட்ரோ: சென்னை மெட்ரோ ரயில்கள் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு நாளை (17/09/2024) சனிக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும்.

Chennai Metro Rail: சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்.. டைமிங் நோட் பண்ணிக்கோங்க பயணிகளே!

சென்னை மெட்ரோ ரயில்

Published: 

16 Sep 2024 18:31 PM

சென்னை மெட்ரோ ரயில்கள் நாளை சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மிலாது நபி பண்டிகையை முன்னிட்டு நாளை (17/09/2024) சனிக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும். மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை பின்வரும் இடைவெளியில் இயங்கும். அதன்படி, காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயங்கும். காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயங்கும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயிலக்ள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனை தெரிந்து கொண்டு மக்கள் தங்களது பயணங்களை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரயில்:

சென்னையில் உள்ள போக்குவரத்துகளில் மிகவும் முக்கியமானது மெட்ரோ ரயில் சேவை. இதில், நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. சென்னையில் தற்போது வரை இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருமங்கலம், கோயம்போடு, வடபழனி வழியாக ஆலந்தூரை அடையும் வகையில் ஒரு வழித்தடம் உள்ளது.

Also Read: சுட்டெரிக்கும் சூரியன்.. நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பநிலை.. வானிலை சொல்வது என்ன?

அதேபோல, சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, நந்தனம் வழியாக மற்றொரு வழித்தடம் உள்ளது. இந்த மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகளவில் மெட்ரோவை பயன்படுத்துவதற்காக பல்வேறு சலுகைகளையும் மெட்ரோ நிர்வாகம் வழங்கி வருகிறது. தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாதவரம் பால் பண்ணை – சிப்காட் பூங்கா, பூந்தமல்லி – கலங்கரை விளக்கம், மாதவரம் பால் பண்டை – சோழிங்கநல்லூர் என 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அதிகரிக்கும் பயணிகளின் எண்ணிக்கை:

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 95.43 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதத்தில் 8,606 பயணிகள் மெட்ரோ இரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ இரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நடப்பாண்டு ஜனவரி மாதத்தில் 84,63,384 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 86,15,008பயணிகளும், மார்ச் மாதத்தில் 86,82,457 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகளும், மேமாதத்தில் 84,21,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 84,33,837 பயணிகளும், ஜூலை மாதத்தில் 95,35,019 பயணிகளும் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 95,43,625 பயணிகளும் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 14.08.2024 அன்று 3,69,547 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

Also Read: ரெடியா தோழர்களே… விஜய்யின் முதல் மாநாடு.. தேதி குறித்த த.வெ.க தொண்டர்கள்

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 33,42,595 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 16,026 பயணிகள், குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 6,050 பயணிகள், க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 40,97,858 பயணிகள் (Online QR 1,82,229; Paper QR 22,55,079; Static QR 2,65,545; Whatsapp – 5,54,218; Paytm 4,54,875; PhonePe – 3,36,152; ONDC – 49,760), மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 20,81,096 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?