5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Metro Trains: நோட் பண்ணுங்க.. பயணிகளுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!

சென்னையின் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பதில் மிக முக்கிய இடத்தை மெட்ரோ ரயில்கள் பிடித்துள்ளது. போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியில் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்தில் செல்ல மெட்ரோ ரயில்கள் பொது மக்களுக்கு பெரிதும் உதவுகிறது. இதனால் பள்ளி கல்லூரிகள் செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் செல்ல வேண்டியவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் தினசரி மெட்ரோ ரயில் சேவை பயன்படுத்தி வருகின்றனர்.

Metro Trains: நோட் பண்ணுங்க.. பயணிகளுக்கு மெட்ரோ ரயில் நிர்வாகம் முக்கிய அறிவிப்பு!
கோப்பு புகைப்படம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 16 Oct 2024 18:38 PM

மெட்ரோ ரயில்கள்: சென்னையில் இயக்கப்படும் மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (அக்டோபர் 17) முதல் வழக்கம் போல் இயக்கப்படும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில், “ மெட்ரோ ரயில் சேவைகள் நாளை(அக்டோபர் 17) முதல் வழக்கமான வார நாள் அட்டவணையின் படி இயக்கப்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது. பச்சை வழித்தடத்தில் புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து இயக்கப்படும் கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் மெட்ரோவுக்கு நேரடியாக செல்லும் மெட்ரோ ரயில்சேவைகள் வழக்கம் போல் இயங்கும். மேலும் மெட்ரோ ரயில் சேவைகள் எப்போதும் போல  காலை 5 மணி முதல் இரவு 11 மணிவரை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Post Office Scheme : 8.2% வட்டி.. மாதம் ரூ.20,500 வருமானம்.. மூத்த குடிமக்களுக்கான அசத்தலான அஞ்சலக சேமிப்பு திட்டம்!

அதிகாலையில் முதல் மெட்ரோ ரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் 5 மணிக்குப் புறப்படும் மற்றும் கடைசி மெட்ரோ ரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் இரவு 11 மணிக்கு புறப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் காலை 8 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை  பச்சை வழித்தடத்தில் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ வரை 6 நிமிட இடைவெளியில் ரயில் சேவைகள் இருக்கும்.

அதேபோல நீல வழித்தடத்தில் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ முதல் விமான நிலையம் மெட்ரோ வரை 6 நிமிடஇடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். இதனிடையே  நீல வழித்தடத்தில் வண்ணாரப்பேட்டை மெட்ரோ முதல்அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இடையே 3 நிமிடஇடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேசமயம் காலை 5 மணி முதல் 8 மணி வரை மற்றும் காலை 11 மணிமுதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை  பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Ration Card : ரேஷன் அட்டை பயனர்களுக்கு முக்கிய செய்தி.. புதிய விதிமுறைகளை கொண்டு வந்த தமிழக அரசு!

பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடத்தில் இரவு 10 மணி முதல் 11 மணி வரை  15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்றும் மெட்ரோ இரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு மெட்ரோ ரயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மக்களால் விரும்பப்படும் மெட்ரோ ரயில்

சென்னையின் போக்குவரத்து தேவையை தீர்த்து வைப்பதில் மிக முக்கிய இடத்தை மெட்ரோ ரயில்கள் பிடித்துள்ளது. போக்குவரத்து நெருக்கடிக்கு மத்தியில் செல்ல வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்தில் செல்ல மெட்ரோ ரயில்கள் பொது மக்களுக்கு பெரிதும் உதவுகிறது. இதனால் பள்ளி கல்லூரிகள் செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள், ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் செல்ல வேண்டியவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் தினசரி மெட்ரோ ரயில் சேவை பயன்படுத்தி வருகின்றனர். சென்னையை பொருத்தவரை விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வரையும் இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

அதுமட்டுமல்லாமல் பூந்தமல்லி, போரூர், வடபழனி, கோடம்பாக்கம், மாம்பழம், மயிலாப்பூர், கலங்கரை விளக்கம், மாதவரம், பழைய மகாபலிபுரம் சாலை உள்ளிட்ட வழித்தடங்களிலும் மெட்ரோ ரயில் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் சாலைகளில் சாதாரண நேரங்களில் கூட போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. பல இடங்களில் மாற்றுப் பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இப்படியான நிலையில் மெட்ரோ ரயில் ஒவ்வொரு மாதமும் பயணிப்போரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் 88 லட்சம் பேர் பயணம் செய்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து இருந்தது. இப்படியான நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்தது. இதனால் பேருந்து மற்றும் மின்சார ரயில்களின் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆனால் மெட்ரோ ரயில் வழக்கம் போல் இயக்கப்பட்டதுடன் பொதுமக்களின் நிலையை கருத்தில் கொண்டு தேவைக்கு அதிகமான சேவையும் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News