Chennai Crime News: அயன்பாக்ஸால் சூடு.. சாப்பாடே போடல.. சென்னை சிறுமி கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்!

சென்னையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலில் அயன்பாக்ஸால் சூடு வைத்து சித்ரவதை செய்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ஓராண்டு முழுவதும் வீட்டிற்கு அனுப்பாமலும், சாப்பாடு கொடுக்காமலும் சித்ரவதை செய்தது தெரியவந்துள்ளது.

Chennai Crime News: அயன்பாக்ஸால் சூடு.. சாப்பாடே போடல.. சென்னை சிறுமி கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல்கள்!

மாதிரிப்படம்

Updated On: 

04 Nov 2024 17:00 PM

சென்னையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடலில் அயன்பாக்ஸால் சூடு வைத்து சித்ரவதை செய்து கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், ஓராண்டு முழுவதும் வீட்டிற்கு அனுப்பாமலும், சாப்பாடு கொடுக்காமலும் சித்ரவதை செய்தது தெரியவந்துள்ளது. சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் நவாஸ். இவருக்கு வயது 35. இவரது மனைவி நபியா. இந்த தம்பதிககு 6 வயதில் குழந்தை உள்ளது. இவர்கள் வீட்டில் தஞ்சாவூரைச் சேர்ந்த 16 சிறுமியை வேலை அமர்த்தியுள்ளனர். இந்த சிறுமிக்கு தாயுடன் தஞ்சையில் வசித்து வந்தால். இவரது தந்தை உயிரிழந்ததால், குடும்ப சூழல் காரணமாக சிறுமி சென்னையில் தங்கி முகமது நவாஸ் வீட்டில் வேலை செய்து வந்தார்.

16 வயது சிறுமி கொடூர கொலை

ஓராண்டுக்கு மேலாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் அடுக்குமாடி குடியிருப்பு பூட்டி கிடந்துள்ளது. சிறுமியும் மாயமாகி உள்ளார். இதுபற்றி வழக்கறிஞர் ஒருவர் அமைந்தகரை காவல் நிலைத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் வீட்டை சோதனையிட்ட போலீசார், கழிவறையில் சிறுமியின் உடல் கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை அடுத்து, சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது, சிறுமியின் வீட்டில் இருந்த முகமது நவாஸ் மற்றும் அவரது மனைவி எங்கே என்று போலீசார் விசாரித்தனர்.

அப்போது அவர்கள் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. அவர்களை போலீசார் இன்று பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் சிறுமியை கொலை செய்யவில்லை என்றும், சிறுமி கழிவறையில் தவறி விழுந்துள்ளதாக கூறினர். இவர்களது பதில்கள் போலீசாருக்கு சந்தேகத்தை எழுப்பியது.

Also Read : மொத்தம் 26 தீர்மானங்கள்.. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு.. த.வெ.க கூட்டத்தில் விஜய் அதிரடி!

அயன்பாக்ஸால் சூடு..  உணவு இல்லை

இதனால் போலீசார் அவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதன்படி, முகமது நவாஸ், அவரது மனைவி நபியா இருவரும் சேர்ந்து சிறுமியை சித்ரவதை செய்து வந்துள்ளனர். மேலும், வீட்டுக்கு செல்ல விடாமல் தொடர்ந்து வேலை வாங்கி உள்ளனர்.

தீபாவளி தினத்தில் சிறுமி வீட்டில் வேலை செய்துக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டில் முகமது நவாஸ், நபியாவுடன் நண்பர்கள் லோகேஷ் என்பவரும் இருந்துள்ளனர். அப்போது, சிறுமி சரியாக வேலை செய்யவில்லை என்று கூறி கோபத்தில் அவர்கள் தாக்கி உள்ளனர். மேலும், சிறுமியின் உடம்பில் அயன்பாக்ஸால் சூடு வைத்தும், சிகரெட்டால் சூடு வைத்தும் சித்ரவதை செய்துள்ளனர்.

இதனால் சிறுமி மயக்க நிலைக்கு சென்றுள்ளார். இருப்பினும், சிறுமியை கண்விழிக்க வைக்க அவர்கள் 3 பேரும் முயன்றனர். ஆனால், சிறுமி இறந்துவிட்டார். இதனால் கொலையை மறைக்க சிறுமியின் உடலை கழிவறையில் வீசி உள்ளனர்.

விசாரணையில் பகீர் தகவல்

மேலும், துர்நாற்றம் வீசக்கூடாது என்பதற்காக வீடு முழுவதும் ஊபத்தியினை கொளுத்திவிட்டு தப்பி சென்றுவிட்டு நாடகமாடியது விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுமி கொலை வழக்கில் தற்போது 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Also Read : தென் மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் மழை.. இன்று 10 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. எங்கே?

ஏற்கனவே முகமது நவாஸ், நபியா ஆகியார் கைதான நிலையில், மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதாவது, வழக்கில் உடந்தையாக செயல்பட்டதாக கூறி லோகேஷ், சீமா மற்றும் வீட்டில் செய்து வரும் மகேஷ்வரி உள்ளிட்டோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக கொலை, போக்சோ, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை சட்டம், சிறார் நீதி சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும், கைதான 6 பேருக்கும் வரும் 16 வரை நீதிமன்ற காவல் அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?