Chennai Power Cut: சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மின்தடை.. லிஸ்டில் இருக்கும் ஏரியாக்கள் இதோ!
தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, போரூர், பல்லாவரம், அடையார், தண்டையார்பேட்டை, எழில் நகர், மாதவரம், சோழிங்கநல்லூர், கிண்டி, தாம்பரம் ஆகிய பகுதியில் பராமாரிப்பு பணிகள் மின் தடை செய்யப்படுகிறது.
மின் விநியோகம் நிறுத்தம்: தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் சார்பில் அவ்வப்போது துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. பராமரிப்பு பணிகள் நடக்கும்போது மின்சாரம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். இந்த நிலையில் சென்னையில் இன்று முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு முன் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, சென்னையில் இன்று (14.06.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை போரூர், பல்லாவரம், அடையார், தண்டையார்பேட்டை, எழில் நகர், மாதவரம், சோழிங்கநல்லூர், கிண்டி, தாம்பரம் ஆகிய பகுதியில் பராமாரிப்பு பணிகள் மின் தடை செய்யப்படுகிறது.
எந்த பகுதிகள்?
போரூர் பகுதியில் ஸ்டேப்ஸ்டோன், போகேன்வில்லா, ஐய்யப்பன் நகர், வசந்தபுரம், விஜயலட்சுமி அவென்யூ தெரு, பெரியார்நகர், அபிராமிநகர், விஜிஎன் நகர், சாந்தி நகர், எஸ்.வி.நகர், ஜீவன் பிரகாஷ் நகர், பூந்தமல்லி புறவழிச்சாலை, ரேடியன் ஷோபா அப்பார்ட்மெண்ட், திருவள்ளூர் சிட்டி 1 முதல் 3 வரை, அசாக் அவென்யு, அம்பாள் கஜலட்சுமி நகர், சிவந்தி நகர், சக்தி நகர், விக்னேஷ் நகர், சமயபுரம் நகர், ஸ்ரீநிவாசாநகர், கணபதி நகர் ஆகிய பகுதியில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பல்லாவரம் பகுதியில் ஜி.எஸ்.டி ரோடு, சரவணாஸ்டோர், பாலாஜி பவன், நியூ காலனி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது. நீலாங்கரை பகுதியில் கால்வாய் ரோடு மெயின் ரோடு, பழைய கணேஷ் நகர், 1 முதல் 7வது தெரு வரை, மகாத்மா காந்தி தெரு, காமராஜ் நகர், கோபிநாத் அவென்யு, அண்ணா தெரு, பாரதி தெரு, ராமலிங்கம் நகர், விவேகானந்தா தெரு, 4வது மெயின் ரோடு, 5வது அவென்யு, 32 முதல் 35வது குறுக்கு தெரு, பெச்ன்ட் நகர், காந்தி மண்டபம், கோட்டூர் கார்டன், 4வது மெயின் ரோடு, ரிவர் விவ் ரோடு, அண்ணா பல்கலைக்கழக குடியிருப்பு, நவாப் கார்டன், கோட்டூரபுரம் உள்ளிட்ட பகுதியில் மின் தடை செய்யப்படுகிறது.
எழில் நகர் பகுதியில் தலைமைச் செயலகம் காலணி, குமரன் குடில், தேவராஜ் அவென்யு, கஸ்டம்ஸ் காலனி, ஸ்ரீநகர், அன்னை பார்வதி நகர் ஆகிய பகுதியில் மின் தடை செய்யப்படுகிறது. தண்டையார்பேட்டை பகுதியில் நார்த் டெர்மினல் ரோடு, டி.எச்.ரோடு பகுதி, திடீர் நகர், செரியன் நகர், சுடலை முத்து தெரு, அசோக் நகர், தேசிய நகர், நம்மயாதெரு, புச்சம்மாள் தெரு, நாகூரான் தோட்டம், தய்யா தெரு, காலடிப்பேட்டை உள்ளிட்ட பகுதியில் மின் தடை செய்யப்படுகிறது.
மாதவரம் பகுதியில் ஜிஎன்டி ரோடு ஒரு பகுதி, கணபதி தோட்டம், விஜிபி நகர், கந்தன் நகர், காசியம்மாள் நகர், நகவல்லை அவென்யு, பிரகாஷ் நகர் மெயின் ரோடு, ஸ்ரீ நிவாச நகர், சஞ்சய் நகர், பிரிந்தாவன் தோட்டம் உள்ளிட்ட பகுதியில் மின் தடை செய்யப்படுகிறது. சோழிங்கநல்லூர் பகுதியில் கைலாஷ் நகர், குருதேவ் காலணி, பெரும்பாக்கம், மெயின்ரோடு, அந்தோணி நகர், நுக்கம்பாளையும் மெயின் ரோடு, ஒட்டியம்பாக்கம் வில்லேஜ், அரசன்கழனி, பள்ளிக்கரணை, வேளச்சேரி மெயின் ரோடு, அஷ்டலஷ்மி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
கிண்டி பகுதியில் திஜி நகர் ஒரு பகுதி, ஜீவன் நகர் , சஞ்சய் காந்தி நகர், லயர்ட் அவென்யு, இந்திரா நகர், லஷ்மி நகர், கிருஷ்ணா கோர்ட், பெரியார் சாலை, பல்லா காலணி, கிரிகோரி நகர், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. தாம்பரம் பகுதியில் கண்ணம்மாள் சாலை, ராமனார் தெரு, பொன்னியம்மன் கோயில் தெரு, சேதுநாராயண தெரு, மார்டிலுலூதர் தெரு, பவானி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இதனால் மேற்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின்சாதனங்களை பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய பணிகளை காலை 9 மணிக்குள் விரைந்து முடிக்க வேண்டும். இல்லையென்றால், மதியம் 2 மணிக்கு பிறகு மின்சாரம் வந்த பிறகு தான் மின்சாதனங்களை பயன்படுத்த முடியும்.