Chennai Powercut: சென்னையில் இன்று மின்தடை.. எந்தெந்த ஏரியா தெரியுமா?
சென்னை மின்தடை: சென்னையில் இன்று (அக்டோபர் 1) முக்கிய இடங்களில் மின்தடை ஏற்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி அயப்பந்தாங்கல், தரமணி மற்றும் சேலையூர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாதனங்கள் பயன்படுத்த முடியாது.
சென்னையில் இன்று (அக்டோபர் 1) முக்கிய இடங்களில் மின்தடை ஏற்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி அயப்பந்தாங்கல், தரமணி மற்றும் சேலையூர் ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாதனங்கள் பயன்படுத்த முடியாது. தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது.
மின்தடை:
இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது. இதற்கிடையில் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க மின்வாரியம் சார்பில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.
ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read; மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த நபர் உயிரிழப்பு.. சென்னையில் மீண்டும் நடந்த சோகம்..
வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் குறிப்பிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் அக்டோபர் 1 ஆம் தேதியான இன்று, சென்னையில் முக்கிய இடங்களில் மின் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, அய்யப்பந்தாங்கல், தரமணி மற்றும் சேலையூர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
எந்தெந்த ஏரியா?
தரமணி:
எம்ஜிஆர் சாலையின் ஒரு பகுதி, சாந்தப்பன் சாலை, கோதண்டராமன் தெரு, பெருங்குடி கல்லுக்குட்டை பகுதி, ஓஎம்ஆர் பகுதி, காமராஜர் நகர், குறிஞ்சி நகர், அண்ணா நெடுஞ்சாலை, நேரு நகர், கொட்டிவாக்கம் பகுதி, சீனிவாச நகர், ஜெயேந்திரா காலனி, திருவள்ளுவர் தெரு, கற்பக விநாயகர் தெரு. நகர், சர்ச் ரோடு, சிபிஐ காலனி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: மதுரையில் 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. மோப்ப நாய் சோதனையில் நடந்தது என்ன?
சேலையூர்:
பகவதி நகர், நட்ராஜ் நகர், ஜெகஜீவன்ராம் நகர், அம்பேத்கர் நகர், அகரம் மெயின் ரோடு, ஐஓபி காலனி, பிரசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.
ஐயப்பன்தாங்கல்:
ஐயப்பன்தாங்கல், ஆர்.ஆர்.நகர், காட்டுப்பாக்கம், புஷ்பா நகர், வேணுகோபால் நகர், அன்னை இந்திரா நகர், வளசரவாக்கம் பகுதி, போரூர் கார்டன் ஃபேஸ் I & II, ராமசாமி நகர், நகர்ப்புற மரம், ஆற்காடு சாலையின் ஒரு பகுதி, எம்.எம். எஸ்டேட், ஜி.கே. எஸ்டேட், சின்ன பி.ஆர். வானகரத்தின் ஒரு பகுதி, பரணிபுத்தூர், காரம்பாக்கம், சமயபுரம், பொன்னி நகர், செட்டியார் அகரம், பூந்தமல்லி சாலையின் ஒரு பகுதி, பெரிய கொளத்துவாஞ்சேரி, மதுரம் நகர், தெள்ளியரகரம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.