Chennai Powercut: தாம்பரம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை மின் தடை.. எந்தெந்த ஏரியாவில்? லிஸ்ட் இதோ..
தாம்பரம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அக்.3, 2024 முக்கிய இடங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கீழ்காணும் இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்சார விநியோகம் இருக்காது. மின் பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மீண்டும் மின்சாரம் அளிக்கப்படும்.
சென்னையில் நாளை (அக்டோபர் 3) முக்கிய இடங்களில் மின்தடை ஏற்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. அதன்படி நியூ கொளத்தூர், தாம்பரம் மற்றும் குமணஞ்சாவடி ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. இதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாதனங்கள் பயன்படுத்த முடியாது. தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது.
மின்தடை:
இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது. இதற்கிடையில் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க மின்வாரியம் சார்பில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.
ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read; பேசாமல் கல்லூரிகளை மூடிவிடலாம் – தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம்..
வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் குறிப்பிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் அக்டோபர் 3 ஆம் தேதியான நாளை, சென்னையில் முக்கிய இடங்களில் மின் தடை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மின் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, நியூ கொளத்தூர், தாம்பரம் மற்றும் குமணஞ்சாவடி ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: புதிய அரசியல் கட்சியை தொடங்கிய பிரசாந்த் கிஷோர்.. முதல் வாக்குறுதியே அதிரடி.. முழு விவரம்..
தாம்பரம் – புதுதாங்கல்:
முல்லை நகர் TNHB, ஸ்டேட் பாங்க் காலனி, முடிச்சூர் சாலை, பழைய தாம்பரம், படேல் நகர், இரும்புலியூர், வைகை நகர், சாய் நகர், TTK நகர், கிருஷ்ணா நகர், சக்திநகர், கன்னடபாளையம், கிருஷ்கிந்தா சாலை, ரெட்டியார் பாளையம், கல்யாண் நகர், மேலண்டை தெரு , பாரதி நகர், நல்லெண்ண நகர், காந்தி நகர், கண்ணன் அவென்யூ, குருஞ்சி நகர்(பகுதி), அமுதம் நகர்(பகுதி) உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது.
நியூ கொளத்தூர்:
பூம்புகார் நகர், கே.சி.கார்டன், சாய் நகர், கம்பர் நகர், தென்பழனி நகர், வீனஸ் நகர், ஜெயராம் நகர், ஆசிரியர் காலனி, ராமமூர்த்தி காலனி, அஞ்சுகம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: 1 முதல் 2 ஆண்டுகளுக்கான FD.. அதிரடியாக உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள்.. முழு விவரம் இதோ!
குமணஞ்சாவடி :
பெரியார் நகர், விஜிஎன் அவென்யூ, ஜீவன் பிரகாஷ் நகர், துளசி நகர், அபிராமி நகர், தங்கவேல் நகர், ரேடியன் குடியிருப்புகள், பூந்தமல்லி நெடுஞ்சாலை, அஷ்டலட்சுமி நகர், விஎன்டி நகர், அப்துல் கலாம் நகர், சக்தி கார்டன், சிந்து நகர், பள்ளிக்குப்பம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது.