Chennai Powercut: கிண்டி, தரமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மின் தடை.. உங்க ஏரியா எப்படி? லிஸ்ட் இதோ..

ஆயிரம் விளக்கு முதல் திருமங்கலம் வரை.. சென்னையில் இன்று (ஆக.1, 2024) முக்கிய இடங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கீழ்காணும் இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 வரை மின்சார விநியோகம் இருக்காது. மின் பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மீண்டும் மின்சாரம் அளிக்கப்படும்.

Chennai Powercut: கிண்டி, தரமணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மின் தடை.. உங்க ஏரியா எப்படி? லிஸ்ட் இதோ..

கோப்பு புகைப்படம்

Updated On: 

18 Nov 2024 14:46 PM

பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் பல்வேறு மாவட்டங்களில் இன்று மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.  சென்னையில் கிண்டி, பொன்னேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை செய்யப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள்  செய்து வருகின்றன.  தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது. இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது.

மின்தடை:

இதற்கிடையில் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க மின்வாரியம் சார்பில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனர்.  ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும். மின்தடை குறித்த செய்திகள் முன்கூட்டியே தெரிவிக்கப்படும் நிலையில், மக்கள் தங்கள் பணிகளை எளிதாக திட்டமிட்டு முடித்துக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ஆயுதபூஜை விடுமுறை நாட்கள்.. அரசு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!

வாரத்தின் அனைத்து வேலை நாட்களிலும் குறிப்பிட்ட பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு 5 மணி நேரம் மின் தடை செய்யப்படுகிறது. அந்த வகையில் அக்டோபர் 5 ஆம் தேதியான இன்று, பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.  கிண்டி, பொன்னேரி, தரமணி உள்ளிட்ட பகுதிகளில்  இன்று மின்தடை செய்யப்படுகிறது.

சென்னையில் எங்கே மின் தடை?

கிண்டி:

லேபர் காலனி, கிண்டி தொழிற்பேட்டை, டி எஸ், மினி டிஎஸ், பாலாஜி நகர் நாகிரெட்டி தோட்டம் ஈக்காட்டுத்தாங்கல் ஒரு பகுதி, காந்திநகர் மெயின் ரோடு ஒரு பகுதி, சர்தார் காலனி, ஜே.என்.சாலை, கலைமகள் நகர், அச்சுதன் நகர் முதல் மெயின் ரோடு, அறுலயாம்பேட்டை, முத்துராமன் தெரு கணபதி காலனி லேசர் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

பொன்னேரி:

தேவம்பட்டு, அகரம், பள்ளிபாளையம், செகனியம், ராக்கம்பாளையம், பூங்குளம் மற்றும் கல்லூர் கிராமம். ரெட் ஹில்ஸ்: ஜே ஜே நகர், ஆர் ஆர் குப்பம், தீர்த்தங்கரை பட்டு, சோத்துக்குப்பம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

மேற்கு அண்ணாநகர் :

ஜே பிளாக், வைகை காலனி, 13 வது மெயின் ரோடு, வள்ளலார் குடியிருப்பு, தங்கம் காலனி, 17 வது மெயின் ரோடு, திருவள்ளுவர் குடியிருப்பு, திருமூலர் காலனி, 18 ஆவது மெயின் ரோடு, மலர் காலனி, கம்பர் காலனி, 19 வது மெயின் ரோடு, தென்றல் காலனி, 15-வது மெயின் ரோடு, எச் பிளாக், 11வது மெயின் ரோடு, ஏபி பிளாட், சி செக்டார், W பிளாக், இமயம் காலனி, கைலாஷ் காலனி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: சென்னை விமான கண்காட்சி.. வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

தரமணி:

எம்ஜிஆர் சாலை ஒரு பகுதி, சாந்தியப்பன் சாலை, கோதண்டராமன் தெரு, பெருங்குடி கல்லு குட்டை ஏரியா, ஓஎம்ஆர், காமராஜர் நகர், குறிஞ்சி நகர், அண்ணா நெடுஞ்சாலை, நேரு நகர், கொட்டிவாக்கம் ஏரியா, ஸ்ரீனிவாச நகர், ஜெயேந்திர காலனி, திருவள்ளுவர் தெரு, கற்பக விநாயகர் தெரு, டெலிபோன் நகர், சர்ச் ரோடு, சிபிஐ காலனி உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!