5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Chennai Powercut: சென்னையில் முக்கிய இடங்களில் நாளை மின்தடை.. எங்கெங்கு தெரியுமா? முழு லிஸ்ட்!

தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது.

Chennai Powercut: சென்னையில் முக்கிய இடங்களில் நாளை மின்தடை.. எங்கெங்கு தெரியுமா? முழு லிஸ்ட்!
மின்தடை
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 09 Sep 2024 19:38 PM

மின்தடை: தமிழகம் முழுவதும் உள்ள இந்த மின் இணைப்புகளுக்கான மின் விநியோகம் செய்வது முதல் மின்தொடர்பான அனைத்தையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம், மின்வாரியம் உள்ளிட்ட நிறுவனங்கள் செய்து வருகின்றன. தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணிக்கை 3.32 கோடியாக உள்ளது. இவை அனைத்திற்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் 2 மாதத்திற்கு ஒருமுறை பயன்பாட்டிற்கு ஏற்ப மின் கட்டணம் வசூலிக்கிறது. இதற்கிடையில் மக்களுக்கு சீரான மின்சாரம் வழங்க மின்வாரியம் சார்பில் அடிக்கடி பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்தில் குறிப்பிட்ட சில பகுதியில் மின்தடை செய்யப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து முன்கூட்டியே செய்திகள், குறுந்தகவல்கள் மூலமாக மின்நுகர்வோர்களுக்கு மின் தடை பற்றி அறிவிக்கப்பட்டும்.

இதனால் மக்கள் தங்களது வேலைகளை முன்கூட்டியே முடித்து வைக்கின்றனர். வாரத்தின் இறுதி நாளான ஞாயிற்று கிழமை மட்டும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாது. இதனால் அன்றைய தினம் மின்தடை ஏற்படாது. இதை தவிற மற்ற அனைத்து நாட்களில் 5 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது. அந்த வகையில், சென்னையில் நாளை முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகள் முடிந்ததும் மதியம் 2.00 மணிக்கு பின் இந்த இடங்களில் மீண்டும் மின் விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்  கூறியிருப்பதாவது, சென்னையின் எழும்பூர், அடையாறு, ரெட் ஹில்ஸ் பகுதிகளில் நாளை (1009.2024) காலை 9 மணி முதல் மதியம் 2.00 மணி வரை  பராமாரிப்பு பணிகள் காரணமாக  மின் தடை செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: நெல்லையில் 3 வயது சிறுவன் கொடூர கொலை… பதைபதைக்கும் சம்பவம்!

எந்தெந்த இடங்கள்?

சென்னையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இதனால், கீழ்கண்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மின்சாதனங்களை பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய பணிகளை காலை 9 மணிக்குள் விரைந்து முடிக்க வேண்டும். இல்லையென்றால், மதியம் 2 மணிக்கு பிறகு மின்சாரம் வந்த பிறகு தான் மின்சாதனங்களை பயன்படுத்த முடியும். எனவே எந்தெந்த பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது என்பதை பார்ப்போம்.

எழும்பூர்:

எழும்பூர் உயர் சாலை, கெங்கு ரெட்டி தெரு, வீராசாமி தெரு, பெருமாள் ரெட்டி தெரு, கியூப் சாலை, ஜெகதம்மாள் கோயில் தெரு, எம்.எஸ்.நகர், மாண்டித் சாலை, எத்திராஜ் சாலை, மார்ஷல் சாலை, மோதிலால் லேன், பழைய கமிஷனர் அலுவலகம், நீதிபதிகள் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

அடையாறு:

கக்கன்ஜி காலனி, சந்திர பிரபு காலனி, ஜிஎன்டி சாலை, தணிகாசலம் ஏ, பி, சி & ஜி பிளாக், முத்தமிழ் நகர் 1 முதல் 7வது பிளாக், வெங்கடேஸ்வரா நகர், என்.எஸ்.கே.சாலை, பார்வதி நகர் அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

ரெட்ஹில்ஸ்:

கோமதியம்மன் நகர், திதாகரைப்பட்டு, டிராகாஸ் சாலை, குமார் நகர், மோனிஷ் நகர், விவேக் அக்பர் அவென்யூ, ஸ்ரீ பால விநாயகர் நகர், விளாங்காடுபாக்கம், சோத்துபெரும்பேடு, காரனோடை, ஆத்தூர் & தேவநேரி, சோலவரம், சிருனியம், நல்லூர், ஒரகடம், புதூர், ஞானயிறு, நெற்குன்றம், கும்மனூர், ஆங்காடு, அருமந்தை ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் எங்கெங்கு?

கோவை:

கோவை மாவட்டத்தில் ஏ.ஆர்.நகர், தமாமி நகர், டிரைவர்கள் காலனி, சுகுணா நகர், யூனியன் சாலை, அசோக் நகர், பாரதி நகர், முருகன் நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முழு நேர மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், வடக்கு மூர்த்தி பாளையம், அரசம் பாளையம், தளுவம்பாளையம், நாமமநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முழு நேர மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Also Read: மிலாடி நபி பண்டிகைக்கான விடுமுறையில் மாற்றம்.. என்னைக்கு லீவ் தெரியுமா? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி:

கள்ளிக்குறிச்சி மாவட்டத்தில் மண்மலை, அரசம்பட்டு, மொட்டம்பட்டி, மூக்கனூர், ஆலத்தூர், மூங்கில்துறைப்பட்டு, சுத்தமலை, வடமாமந்தூர், மணலூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை முழு நேர மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

Latest News